← முகப்பு

திருப்பரங்குன்றம் தீப அனுமதி: உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ஜவாஹிருல்லா கவலை!

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தீப அனுமதி: உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ஜவாஹிருல்லா கவலை!

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், உயர்நீதிமன்ற உத்தரவுகளின் சில அம்சங்களை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், சர்ச்சைக்குரிய கல் தூணில் நவம்பர் 24ஆம் தேதி ஒருமுறை தீபம் ஏற்ற அனுமதி அளித்திருப்பது கவலையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கல் தூண் பாரம்பரியமாகத் தீபம் ஏற்றப்படும் இடமா, அதன் உரிமை யாருக்கு உள்ளது, அங்கு தீபம் ஏற்றுவதற்கு மத வழக்காறு உள்ளதா உள்ளிட்ட சட்ட மற்றும் வரலாற்று கேள்விகளுக்கு இன்னும் இறுதி விடை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

மேலும், 2019ஆம் ஆண்டு அயோத்தி பாபர் பள்ளிவாசல் வழக்கின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய இடைக்கால உத்தரவுகளின் எதிர்கால விளைவுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

அரசமைப்புச் சட்டத்தின் 25, 26ஆவது பிரிவுகள் வழங்கும் மதச் சுதந்திரம் அனைவருக்கும் சமமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தர்கா மற்றும் பள்ளிவாசலின் வழிபாட்டு உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டின் மதநல்லிணக்க மரபையும் திருப்பரங்குன்றத்தின் பன்மத வரலாற்றையும் பாதுகாக்க வேண்டியது அரசுக்கும் நீதித்துறைக்கும் உள்ள பொறுப்பு என்றும் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

திருப்பரங்குன்றம் தீப அனுமதி: உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ஜவாஹிருல்லா கவலை! | INDIAVAANI