← முகப்பு

வடிவேலு இல்லாத குறையை வைகோ தீர்த்து வைப்பார்! – மல்லை சத்யா கலாய்!

நகைச்சுவைக்கு வடிவேலு இல்லாததால் அரசியலில் அந்த இடத்தை வைகோ நிரப்பிக் கொண்டிருப்பதாக கிண்டல் செய்து பேசியுள்ளார் தி.வே.க தலைவர் மல்லை சத்யா.

வடிவேலு இல்லாத குறையை வைகோ தீர்த்து வைப்பார்! – மல்லை சத்யா கலாய்!

வைகோ தொடங்க ம.தி.மு.க கட்சியில் மிகப்பெரும் தூணாய் செயல்பட்டு வந்தவர் மல்லை சத்யா. மதிமுகவில் முக்கியமான பொறுப்புகளை வகித்து வந்த அவருக்கும், வைகோவின் மகன் துரை வைகோவிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உள் விவகாரம் ஏற்பட்டு வந்த நிலையில், வைகோவும் இதை சரிவரக் கவனிக்காததால், விரக்தியடைந்த மல்லை சத்யா மதிமுகவை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

அதன் பின்னர் மல்லை சத்யாவும் அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து கடந்த 2024ம் ஆண்டு திராவிட வெற்றிக் கழகம் (தி.வெ.க) என்ற புதியக் கட்சியைத் தொடங்கினர். கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.வெ.க நேரடியாக தேர்தலில் களம் காணவில்லை என்றாலும் திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று கட்சித் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மல்லை சத்யா மற்றும் கட்சியினர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், வைகோ தற்போது தீவிரமான தவெக ஆதரவு மனநிலையில் இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய மல்லை சத்யா, ”தவெகவிற்காக வீதிவீதியாக இறங்கி பிரச்சாரம் செய்வேன் என வைகோ பேசி வருகிறார். இதற்கு முன்னாலும் இவர் வீதிவீதியாக இறங்கி நிறைய நின்றிருக்கிறார். ஆனால் டெபாசிட் கூட வாங்கியது கிடையாது. 2016ல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோரை சேர்த்துக் கொண்டு மக்கள் நலக் கூட்டணி என களமிறங்கி தோல்வியைத் தழுவினார்.

திரைப்படத்தில் நடிகர் வடிவேலு காமெடிக்கு இல்லாத நிலையில், அரசியலில் காமெடி செய்ய வைகோ உருவெடுத்துள்ளார். மதிமுக கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்துக் கொண்டிருக்கிறது. கட்சியின் நிலைபாடு மீது தொண்டர்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ளது. தந்தை வளர்த்த கட்சியை மகன் அழிக்கப் போகிறார்” என பேசியுள்ளார்.

முன்னதாக நேற்று விஎஸ்.பாபு இறுதி ஊர்வலத்தில் விஜய்யுடன் பங்கேற்ற வைகோ, போக்குவரத்து அமைச்சர் விஜய் பார்த்திபன் குறுக்கே கை நீட்டியதற்காக அவரிடம் பொதுவெளியில் வைத்து கோபமாக பேசி கையை நீட்டியது சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !