கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள பொதிகை இல்லத்தில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற ஒரு நாள் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை புதிய தமிழகம் கட்சி வரவேற்பதாகவும், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தின், மலையில் உள்ள, உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவதற்கு உண்டான முயற்சியில், ஈடுபட்டு ஏற்ற முடியாமல் போனதால், நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபம் ஏற்ற தனிநீதிபதி உத்தரவிட்டார்.
அதனை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்த நிலையில், இதனை விசாரித்த இருவர் அடங்கிய நீதிபதி குழுவினர் தீபம் ஏற்ற மறுபடியும் அனுமதி அளித்துள்ளனர். தமிழக அரசுக்கு இது ஒரு பின்னடைவு என்று கூறியவர், இரண்டாவதாக காவிரி நதி நீர் பங்கீட்டில், இந்த ஆண்டுக்கான ஜூன், மே, ஜூலை உள்ளிட்ட மாதத்திற்கான வரவேண்டிய தண்ணீர் இன்னுமும் திறக்க பட வில்லை, இதனால் மேட்டூர் அணை தற்போது வரை முழுமையாக நிறம்பவில்லை. தமிழக அரசு பலமுறை முறையிட்டும் மேகதாதுவில் அணைகட்டுவதை நிறுத்தாமல் கர்நாடக முதல்வர் சிவக்குமார் செயல்பட்டு வருகின்றார் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் என்ற ஒரு அமைப்பு, உருவாக்கபட்டுள்ளது.
Buy Now ! Pay Daily !
ஆனால் இந்த அமைப்பின் பேச்சையும் கர்நாடக அரசு மதிக்கவில்லை. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட போது, இதற்க்காக உருவாக்கபட்ட அமைப்பிடம் முறையிடுங்கள் என கூறி இந்த வழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதுவும் தமிழக அரசுக்கு ஒரு பின்னணைவு என்று தெரிவித்தார்.
குறிப்பாக தமிழக அரசு முறையான ஆவணங்களை இணைக்கவில்லை, உரிய அழுத்தமும் சரியாக கொடுக்க படவில்லை, தமிழக அரசு இந்த விஷயத்தில் முறையாக செயல்படவில்லை என்றால், இனி கர்நாடக மாநிலத்தில் இருந்து தண்ணீர் தமிழகத்திற்கு வருவது முற்றிலும் தடை படும், காவிரி வரட்சியடையும் இதனை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதுடன் உணவு பற்றாக்குறை ஏற்படும் நிலை எற்படும் என்றார்.
எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் மெத்தனம் காட்டாமல் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி கேட்டு கொள்வதாக தெரிவித்தார்.






