← முகப்பு

நாரா லோகேஷின் கிண்டலுக்கு கீர்த்தனா பதிலடி!

எக்ஸ் தளத்தில் அமைச்சர் நாரா லோகேஷ் முன்வைத்த கிண்டலான கருத்துக்கு, தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அளித்துள்ள பதில் கவனம் பெற்றுள்ளது.

நாரா லோகேஷின் கிண்டலுக்கு கீர்த்தனா பதிலடி!

சர்வதேச அளவில் வெளிநாட்டு நிறுவனங்களைத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பதும், முதலீட்டாளர்களின் தேவைக்கு ஏற்ப தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் தொழில் தொடங்க பொருத்தமாக இருக்கும் என்பதை ஆய்வு செய்து பரிந்துரைக்கும் நிறுவனம் தான் கைடன்ஸ். இதன் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது.

கடந்த ஜீன் மாதம் கைடன்ஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் பெருமளவில் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், ஆந்திர பிரதேசத்திற்கு முதலீடுகள் தொடர்பான அரசின் ரகசிய தகவல்களை சிலர் கசியவிட்டதாகவும் உறுதி செய்யப்படாத ஊடகச் செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்த சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ள கைடன்ஸ் நிறுவனம், ஜூலை மாதத்தில் ஊழியர்கள் யாரும் பணி நீக்கம் செய்யப்படவில்லை என்றும், சில ஊழியர்கள் தனிப்பட்ட காரணங்கள் மற்றும் குடும்பச் சூழல் காரணமாகவே பணியில் இருந்து விலகியதாகவும் தெரிவித்தது.

மேலும் தமிழ்நாடு தொடர்ந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பமான மாநிலமாக இருந்து வருவதாகவும், முதலீடுகளை ஈர்ப்பதில் அண்டை மாநிலங்களுடன் ஆரோக்கியமான போட்டி நிலவுவதாகவும் விளக்கமளித்துள்ளது.

நாரா லோகேஷின் எக்ஸ் பதிவு

இந்த சர்ச்சைகளுக்கு இடையே ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு கிண்டலான கருத்தை தெரிவித்திருந்தார். அதில், "ஆந்திர பிரதேசத்தின் மிக ரகசியமான முதலீட்டு உத்தி கசிந்துவிட்டது. அது, 'முதலீட்டாளர்களுக்கு அன்றைய தினமே பதிலளிப்பதுதான்.' தாராளமாக நீங்களும் இதைப் பின்பற்றலாம்!" எனப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு பிற மாநிலங்களை குறிப்பிடுவது போல் தமிழகத்தை மறைமுகமாகக் கிண்டல் செய்யும் வகையிலே பார்க்கப்பட்டது.

அமைச்சர் கீர்த்தனாவின் பதில்

இந்நிலையில், இந்த பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில், "விரைவான பதில்கள் நல்லதுதான். ஆனால், அதைவிட வேகமான செயல்பாடு? இன்னும் சிறப்பு! தமிழ்நாடு, இரண்டாவது முறையாக நடைபெறவுள்ள வெற்றி முதலீடு மற்றும் அவற்றைச் செயல்படுத்துவதற்கான மாநாடு 2026ஐ நடத்தத் தயாராகி வருகிறது!"

"எங்களது நோக்கம் தெளிவானது: முதலீட்டு உறுதிமொழிகள், அவற்றைச் செயல்படுத்துவதற்கான இலக்குகள், களத்தில் தொடங்கப்படும் திட்டங்கள் மற்றும் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள். முதலமைச்சர் ஜோசப் விஜயின் தலைமையில், முதலீட்டு உறுதிமொழிகளை உறுதியான செயல்பாடுகளாக மாற்றி, களத்தில் கண்கூடான முடிவுகளை எட்டுவதில் கவனம் செலுத்தி வருகிறோம்" எனப் பதிலடி தந்துள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !