← முகப்புதிருநெல்வேலி →

ஒரே நேரத்தில் 4 பேர் டிஸ்மிஸ்! - சாட்டையை சுழற்றும் தமிழக காவல்துறை!

தமிழக காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், கடமை தவறியும் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தென்மண்டலத்தில் மூன்று காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஒரு உதவி ஆய்வாளர் என மொத்தம் 4 காவல்துறை அதிகாரிகள் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே நேரத்தில் 4 பேர் டிஸ்மிஸ்! - சாட்டையை சுழற்றும் தமிழக காவல்துறை!

தென்மண்டல காவல்துறை தலைவர் (ஐஜி) விஜயேந்திர பிதாரி மற்றும் திருநெல்வேலி சரக டிஐஜி திருநாவுக்கரசு ஆகியோர் இந்த அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர். பணியிடை நீக்கம் செய்யப்படாமல், நேரடியாகக் காவல்துறையில் இருந்தே இவர்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் மற்றும் அதற்கான பின்னணி விவரங்கள்:

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

1. காவல் ஆய்வாளர் பிரவீனா (ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி மாவட்டம்): சில நாட்களுக்கு முன்பு கட்டாய ஓய்வில் வீட்டிற்கு அனுப்பப்பட்டிருந்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய பெண் ஆய்வாளர் பிரவீனா, தற்போது நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அங்கு நடைபெற்ற சிறுமியின் கொலை வழக்கில் சரியாக விசாரணை செய்யவில்லை எனவும், அந்த வழக்கை உரிய முறையில் கையாளாமல் அலட்சியமாகச் செயல்பட்டதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் இந்தக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

காவல் ஆய்வாளர் பிரவீனா
காவல் ஆய்வாளர் பிரவீனா

.2. காவல் ஆய்வாளர் திலீபன் (ஆறுமுகநேரி, தூத்துக்குடி மாவட்டம்): தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், சுமார் 555 நாட்கள் பணிக்கு வராமல் விடுமுறையில் இருந்துள்ளார். இந்த நீண்ட விடுப்புக்கான போதிய காரணங்களையோ அல்லது உரிய மருத்துவச் சான்றிதழ்களையோ அவர் சமர்ப்பிக்காததால், திருநெல்வேலி சரக டிஐஜி திருநாவுக்கரசு ஐபிஎஸ் அவரைப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

காவல் ஆய்வாளர் திலீபன்
காவல் ஆய்வாளர் திலீபன்

3. உதவி ஆய்வாளர் ராஜகோபால் (பழனி தாலுகா, திண்டுக்கல் மாவட்டம்) மற்றும் காவல் ஆய்வாளர் கௌதமன் (வத்தலகுண்டு, திண்டுக்கல் மாவட்டம்): தங்கள் பிரச்சினைகள் மற்றும் இடர்பாடுகளுக்குத் தீர்வு காண காவல் நிலையத்திற்கு நேரில் வரும் பெண் புகார்தாரர்களின் வாட்ஸ்அப் எண்களைப் பெற்று, அதில் தேவையில்லாத தகவல்களைத் தொடர்ந்து அனுப்பி முறையற்ற வகையில் தொடர்பு கொண்டதாக இவர்கள் இருவர் மீதும் அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. இது குறித்து நடத்தப்பட்ட துறை ரீதியான விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி இன்று (17.11.2026) காலை இவர்கள் இருவரையும் உடனடியாகப் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

உதவி ஆய்வாளர் ராஜகோபால்
உதவி ஆய்வாளர் ராஜகோபால்
காவல் ஆய்வாளர் கெளதமன்
காவல் ஆய்வாளர் கெளதமன்

காவல்துறை வட்டாரத்தின் எச்சரிக்கை: தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு, காவல்துறையின் செயல்பாடுகளைச் சீரமைக்கும் வகையில் இதுபோன்ற ஒழுங்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எந்த அந்தஸ்தில் இருக்கும் காவல்துறை அதிகாரியாக இருந்தாலும், காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்க வரும் பெண்களிடம் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், அவர்களது பிரச்சினைகளைக் காது கொடுத்துக் கேட்டு உரிய தீர்வு காண வேண்டுமே தவிர, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவது கடும் குற்றமாகப் பார்க்கப்படும் என்றும் தென்மண்டல ஐஜி அலுவலக வட்டாரங்கள் கடுமையாக எச்சரித்துள்ளன. தொடர்ச்சியாக அடுத்தடுத்து மூன்று ஆய்வாளர்கள் (ஒரு பெண் ஆய்வாளர் உட்பட) மற்றும் ஒரு உதவி ஆய்வாளர் என நான்கு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழக காவல்துறையிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !