சிவகங்கை மாவட்டம் தேவனிப்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன், 40. இவர் இன்று காலை இடையமேலூர் அருகே தாமரைக்கி சாலையில் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
ஐயப்பனுக்கு மாலை அணிந்திருந்த மகேஸ்வரனை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதுடன், அவரது முகத்தையும் சிதைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Buy Now ! Pay Daily !
படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மகேஸ்வரனை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கொலைக்கான காரணம் என்ன, இதில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல்துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதுடன், குற்றப் பின்னணி கொண்ட நபர்களை முறையாகக் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.





