← முகப்புசிவகங்கை →

மதுபான கடை அருகே முதியவர் கழுத்தறுத்து கொலை!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் உள்ள மதுபானக்கடை அருகே 55 வயது முதியவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர்.

மதுபான கடை அருகே முதியவர் கழுத்தறுத்து கொலை!

காளையார்கோவிலை அடுத்துள்ள சூரானம் கிராமத்தை சேர்ந்தவர் 55 வயதான ஜான் கென்னடி. இவர் இன்று காலை சிலுக்கப்பட்டி பிரதான சாலையில் செயல்பட்டுவரும் அரசு மதுபான கடை அருகே கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் காளையார்கோவில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே உடனடியாக சம்பவ இடம் வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையே மாவட்ட எஸ்.பி அபிஷேக் குப்தா சம்பவ இடம் வந்து பார்வையிட்டதுடன் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினரை முடுக்கிவிட்டார். இதனையடுத்து இறந்த ஜான் கென்னடியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் முதியவர் மது அருந்த வந்த இடத்தில் ஏதேனும் தகராறு ஏற்பட்டு அதில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என காவல்துறை தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட காவல்துறை சார்பில் குற்ற சம்பவங்களை போக்கி அமைதி நிலவ அங்காங்கே கொடி அனிவகுப்பு நடத்தி வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை அருகே பட்ட பகலில் இளைஞர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததும் அதனை தொடர்ந்து இன்று மதுபான கடை அருகே முதியவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும் காவல்துறையினரின் செயல்பாடுகளை கேள்விக்குறியாக்கியுள்ளதுடன் பொதுமக்களை மிகுந்த அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !