ஆசிரியர் பக்கம்இரவு முழுவதும் மணல் வேட்டை... கண்டுகொள்ளாத அதிகாரிகள்! வைகை ஆற்றைக் காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் முன்வருமா?
சிவகங்கை மாவட்டத்தில் வைகை ஆற்றின் மணல் வளம் இரவு நேரங்களில் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, திருப்புவனம், லாடனேந்தல், மற்றும் மாரநாடு, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளப்பட்டு, கனரக லாரிகளில் கடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.