மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்த மண்டர் கிவாலி என்பவர், கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி, நிலம் மற்றும் பணம் தொடர்பான தகராறில் சுபம் சவான் என்பவரை கொலை செய்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு விசாரணையை எதிர்கொண்டு வந்தார்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், நான்கு நாட்களுக்கு முன்புதான் வெளியே வந்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் சிவாஜிநகர் மாவட்ட நீதிமன்றத்தின் 4-வது நுழைவாயில் அருகே மண்டல் வந்து கொண்டிருந்தார்.
Buy Now ! Pay Daily !
அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 5 முதல் 6 பேர் கொண்ட கும்பல், மண்டரை வழிமறித்து அரிவாள் மற்றும் கோடாரிகளால் சரமாரியாக வெட்டியது. இதில் அவரது ஒரு கை துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், அந்தக் கும்பல் அவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிகிறது. தாக்குதலை நடத்திவிட்டு, மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் இருசக்கர வாகனங்களில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் நடைபாதையில் சரிந்து விழுந்த மண்டர், சற்று நேரம் எழுந்து நடக்க முயன்று மீண்டும் மயங்கி விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயமடந்த மண்டரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவ இடத்தில் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் நிரப்பப்பட்ட ஒரு மேகசினைக் கைப்பற்றியுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் சுபம் சவானின் சகோதரர்ர் அக்ஷய் சவானின் தலைமயிலான ஐந்து பேர் கும்பல் என்பது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய ஐந்து பேரையும் தெளண்ட் பகுதியில் மட்டக்கிப்பிடித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.






