← முகப்பு

பிஸ்கட்டை தொடர்ந்து ஜோசியத்தில் நுழைந்த ஜியோ! – JIO Astro செயலி அறிமுகம்!

சமீபமாக பல புது முதலீடுகள், பொருட்களை அறிமுகப்படுத்தி வரும் ஜியோ நிறுவனம் அடுத்தக்கட்டமாக JIO Astro என்னும் ஜோசிய செயலியை அறிமுகப்படுத்த உள்ளது.

பிஸ்கட்டை தொடர்ந்து ஜோசியத்தில் நுழைந்த ஜியோ! – JIO Astro செயலி அறிமுகம்!

இந்தியாவில் அலைபேசி நெட்வொர் சேவை வாயிலாக பிரபலமடைந்த நிறுவனம் அம்பானியின் JIO. ஆரம்பத்தில் 3ஜி தொடங்கி 4ஜி,5ஜி என தனது சேவைகளை வேகமாக விரிவுப்படுத்தி வரும் ஜியோ நிறுவனம், இந்தியாவில் அதிகமான வாடிக்கையாளர்களை பெற்ற நெட்வொர்க் நிறுவனமாக உள்ளது. நெட்வொர்க் சேவை மட்டுமல்லாமல் அதனுடன் இணைந்த லைவ் டிவி, ஓடிடி, Cloud என பல்வேறு add-on சேவைகள் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்ந்து தக்க வைத்து வரும் ஜியோ நிறுவனம், கூடவே சமீபமாக வழங்கி வரும் Gemini Pro, Canva Pro சலுகைகளும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் முன்னதாக ஜியோ தனது வருடாந்திர சந்திப்பில் ஜியோவின் பிரத்யேக ஏஐ மாடலை உருவாக்கி விரிவுப்படுத்துவது குறித்து அறிவித்திருந்தது. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சிக்கு நடுவே தேவைப்படும் முதலீடுகளுக்காக சமீபத்தில் பங்கு சந்தையில் முதல்முறையாக IPOக்களையும் வெளியிட்டது. பங்கு சந்தை மூலம் முதலீடுகளை ஈர்த்து 12.8 லட்சம் கோடிகளை பெற்றுள்ளது ஜியோ.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

JIO Astro அறிமுகம்

இதை வைத்து ஜியோ அடுத்தடுத்து என்னென்ன திட்டங்களை மேற்கொள்ளப் போகிறது, எந்த வகையான அப்ளிகேஷன்களை வெளியிடப் போகிறது என பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் JIO Astro என்ற ஜோசியம் பார்க்கும் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது ஜியோ. ஏஐ மூலமாக ஜாதகம் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில் பிறந்த தேதி, பெயர் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்டால் ஜாதக பலன்களை ஏஐ கணித்து சொல்லும். இந்த சேவை முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் ஆங்கிலம், இந்தி, மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் மூலம் பிரபலமான ஜோதிடர்களோடு ஆன்லைன் மூலமாக ஜோசிய ஆலோசனை பெற முடியும் என்றும் கூறப்படுகிறது. பிற பிராந்திய மொழிகளிலும் ஜோசியம் சொல்லும் வகையில் அப்ளிகேஷன் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. ஐபோன் பயனர்களுக்கு இந்த அப்ளிகேஷன் இன்னும் தயாராகவில்லை.

ஏற்கனவே சந்தையில் ஏஐ மூலமாக ஜோசியம் பார்க்கும் செயலிகள், ஜோசியர்களை ஆன்லைன் மூலமாக கலந்து ஆலோசிக்கும் செயலிகள் பல உள்ள நிலையில் ஜியோவின் இந்த புதிய JIO Astro எந்த அளவிற்கு அவற்றை எதிர்கொண்டு வெற்றிபெறும் என்பது கேள்வியாக உள்ளது. இந்த செயலியை ஜியோ தனது ரீசார்ஜ் திட்டங்களோடு இலவசமாக வழங்க வாய்ப்புள்ளது. ஆனாலும் ஏஐ வைத்து ஜியோ என்ன செய்யப்போகிறது என்று பலரும் ஆர்வமாக எதிர்பார்த்திருக்க ஜோசிய செயலி அறிமுகமானது பலருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

முன்னதாக Reliance Consumer Products Limited நிறுவனம் தற்போதைய உணவுச் சந்தை போட்டிகளுக்கு நடுவே Independence Biscuits என்ற 5 ரூபாய் விலையிலான பிஸ்கட்டை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. வணிக பாய்ச்சல் எங்கோ ஒருபுறம் சென்றுக் கொண்டிருக்க பிஸ்கட் பாக்கெட், ஜோசிய ஆப் என ஜியோ, ரிலையன்ஸின் செயல்பாடுகள் வாடிக்கையாளர்களுக்கே புரியாத புதிராக அமைந்துள்ளன.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !