← முகப்பு

ராணுவ விமானத்தை நெடுஞ்சாலையில் இறக்கிய வீரர்கள்! – அமைச்சர் பகிர்ந்த வீடியோ!

குஜராத் மாநிலத்தில் இந்திய ராணுவத்தின் மைக்ரோலைட் விமானங்களை நெடுஞ்சாலையில் வெற்றிகரமாக தரையிறக்கிய வீடியோவை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார்.

ராணுவ விமானத்தை நெடுஞ்சாலையில் இறக்கிய வீரர்கள்! – அமைச்சர் பகிர்ந்த வீடியோ!

நாடு முழுவதும் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் பல முக்கிய நகரங்களையும் இணைக்கின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலைகளை கூடுதல் பயன்பாடுகளுக்கு உட்படுத்துவது குறித்த பல்வேறு திட்டங்களை மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அவ்வாறாக சிறிய ரக விமானங்களை தேசிய நெடுஞ்சாலையில் தரையிறக்குவது குறித்த சோதனை இன்று குஜராத் நெடுஞ்சாலையில் நடத்தப்பட்டுள்ளது.

இந்திய ராணுவமும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் இணைந்து ’டீம் மவுண்டன் ஈகிள்ஸ்’ மைக்ரோலைட் விமானத்தை அமிர்தசரஸ்-ஜாம்நகர் நெடுஞ்சாலை (NH-754A) நடுவே தரையிறக்கியுள்ளனர். விமானம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு மீண்டும் புறப்பட்டு சென்றுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதுகுறித்த வீடியோவை பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ”இந்த குறிப்பிடத்தக்க சாதனை, ராணுவம் - நெடுஞ்சாலை துறை இடையேயான இணைப்பை வலுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, நமது ஆயுதப் படைகளின் மூலோபாய மற்றும் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும். உலகத் தரம் வாய்ந்த நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை உருவாக்குவதில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மற்றும் NHAI-யின் அர்ப்பணிப்பை இது காட்டுகிறது. மேலும், பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைப்புடன், சாத்தியமான இடங்களில் வான்வழி சாகசங்கள், சுற்றுலா மற்றும் பிற வளர்ந்து வரும் செயல்பாடுகளை எளிதாக்குவதில் தேசிய நெடுஞ்சாலைகளின் ஆற்றலையும் இது எடுத்துக்காட்டுகிறது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியை ஒருங்கிணைத்து வெற்றிகரமாகச் செயல்படுத்திய இந்திய ராணுவத்தின் 'டீம் மவுண்டன் ஈகிள்ஸ்', NHAI மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் நான் வாழ்த்துகிறேன். மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ் நாட்டின் வளர்ச்சி, உத்திசார் மற்றும் அவசரகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு வலுவான, மீள்திறன் கொண்ட மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !