← முகப்பு

5 லட்சம் பேருடன் நடைபெற்ற திருமணம்: மாஸ் காட்டிய முன்னாள் எம்எல்ஏ!

பீகார் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அனந்த் சிங்கின் இல்லத் திருமண விழா, நாடே திரும்பி பார்க்கும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது.

5 லட்சம் பேருடன் நடைபெற்ற திருமணம்: மாஸ் காட்டிய முன்னாள் எம்எல்ஏ!

திருமணம் என்பது இரண்டு தனிப்பட்ட குடும்பங்களின் சொந்தங்கள் மட்டுமே பங்குபெறும் ஒரு தனிப்பட்ட நிகழ்வாகும்.

அதே திருமணத்தில் ஒரு ஊரே ஒன்று கூடி திருவிழாபோல் நடைபெற்றால் எப்படி இருக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது பீகாரில் நடந்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

நேற்று நடைபெற்ற பீகார் மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ., அனந்த் சிங் இல்ல திருமண விழா அதற்கு சாட்சியாக அமைந்து உள்ளது. தனது இளைய மகள் ஷிவாங்கி சிங் திருமணத்தை, பல லட்சம் பேரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரம்மாண்ட திருவிழாவாக அவர் வடிவமைத்து உள்ளார்.

அரண்மனை பாணியில் மண்டபம், குதிரை பந்தயம், பிரம்மாண்ட விருந்து என நாடே வியக்கும் அளவிற்கு தனது மகளின்திருமணத்தை நடத்தியுள்ளார்.

திருமணத்திற்காக அனந்த் சிங்கின் பூர்வீக கிராமமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திருவிழா கோலம் பூண்டது.

ஜெய்ப்பூர் அரண்மனை பாணியில் 10 முதல் 12 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட மண்டபம், ஜெய்மாலா நிகழ்ச்சிக்கான தனி மேடை, சிறப்பு விருந்தினர்களுக்கான ஹெலிபேட் உள்ளிட்ட ஏற்பாடுகள் களைகட்டின.

ஸ்தம்பித்த போக்குவரத்து

பீகார் மாநிலத்தின் முன்னாள் எம்எல்ஏ அனந்த் சிங் மற்றும் முன்னாள் எம்எல்ஏ நீலம் தேவி ஆகியோரின் இளைய மகள் ஷிவானி சிங்கிற்கும், பாட்னாவின் பிஹ்தா பகுதியைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் கமாண்டன்ட் ரன்விஜய் குமார் சிங் மற்றும் ஆஷா தேவி ஆகியோரின் மகன் ரிஷிகேஷ் குமாருக்கும் நேற்று பீகாரில் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கான அழைப்பிதழ் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என அனைவருக்கும் பொதுவான அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால், பீகார் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் நடாவன் கிராமத்தை நோக்கிப் படையெடுத்தனர்.

வாகனங்களில் மற்றும் கால்நடையாக நடந்து வந்தும் மக்கள் குவிந்ததால், கிராமத்தைச் சுற்றி 5 முதல் 10 கிலோமீட்டர் தூரத்திற்குக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதில் பீகார் சட்டப்பேரவைத் தலைவர் பிரேம் குமாரின் வாகன அணிவகுப்பு கூடப் பல மணி நேரம் நெரிசலில் சிக்கியது.

சாலையோரங்களில் தற்காலிக உணவகங்களும், கூரைகளில் ஒலிபெருக்கிகளும் அமைக்கப்பட்டிருந்ததால், திருமண வீடு ஒரு 'மகா கும்பமேளா' போலக் காட்சியளித்தது.

குதிரைப் பந்தயம்

இந்தத் திருமண விழாவின் முக்கிய ஈர்ப்பாகப் பிரமாண்ட குதிரைப் பந்தயம் நடத்தப்பட்டது. பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 52 குதிரைகளும், திறமையான வீரர்களும் இதில் பங்கேற்றனர்.’

பந்தயத்தில் வெற்றி பெறுபவருக்குப் புத்தம் புதிய 'மஹிந்திரா தார்' கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைக் காணத் திரண்ட கூட்டத்தினர் மைதானத்தைச் சூழ்ந்தனர்.

இடப்பற்றாக்குறை காரணமாகப் பல இளைஞர்கள் உயரழுத்த மின்கோபுரங்களின் மீது ஏறி அமர்ந்து போட்டியை ரசித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இறுதிக்கட்டப் போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்ததால், போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பிரமாண்ட விருந்தும் இனிப்பு வகைகளும்

சுமார் ஐந்து லட்சம் விருந்தினர்களுக்கு உணவளிக்க மிகப்பெரிய அளவில் சமையல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 500-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் இரவு பகலாகப் பணியாற்றி 150-க்கும் மேற்பட்ட உணவு வகைகளைத் தயாரித்தனர்.

இனிப்புகள் மற்றும் உணவுத் தயாரிப்புக்காக 10,000 கிலோ கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரிகளில் பால் கொண்டு வரப்பட்டது.

விருந்தினர்களை வரவேற்க 25 லட்சம் ரசகுல்லாக்களும், 50 லட்சம் குலாப் ஜாமூன்களும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டிருந்தன.

ஜெய்ப்பூர் அரண்மனை பாணியில் அலங்காரம்

உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தானிலிருந்து வந்த 500-க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்கள் திருமண அரங்கை அலங்கரித்திருந்தனர். ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற 'பத்ரிகா கேட்' வடிவமைப்பில், 100 அடி அகலமும் 30 அடி உயரமும் கொண்ட இளஞ்சிவப்பு நிற மணமேடை

ஹெலிகாப்டரில் வந்திறங்கிய முக்கியப் பிரமுகர்கள்

முக்கிய விருந்தினர்களின் வருகைக்காகக் கிராமத்தில் பிரத்யேக ஹெலிபேட் அமைக்கப்பட்டிருந்தது. முன்னாள் பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங், மத்திய அமைச்சர் லலன் சிங் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், போஜ்புரி திரையுலக நட்சத்திரங்களும் விழாவில் கலந்துகொண்டனர். கங்கா ஆரத்தி மற்றும் கவ்வாலி இசை நிகழ்ச்சிகளும் விழாவிற்கு மேலும் மெருகூட்டின.

கட்சிப் பாகுபாடின்றி அனைவரையும் ஒன்றிணைத்த இந்த நிகழ்வு, வெறும் குடும்ப விழாவாக மட்டுமல்லாமல், பீகார் மாநிலத்தின் மிகப்பெரிய சமூக மற்றும் கலாச்சாரச் சங்கமமாக அமைந்தது. பிரமாண்ட ஏற்பாடுகள் மற்றும் கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்தால், அனந்த் சிங் இல்லத் திருமணம் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !