தமிழகத்தில் எங்கு பறவை காய்ச்சல் இல்லை பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை - கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் செ.கமலி தெரிவித்துள்ளார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொளந்தாகண்டனூர் பகுதியில் செயல்பட்டு வரும் கால்நடை பெருமருத்துவமனை வளாக மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் ஆய்வு தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கமலி இன்று திடீர் ஆய்வு நடத்தினார் .
Buy Now ! Pay Daily !
பின்னர் அமைச்சர் கமலி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், இன்று கரூர் மாவட்டத்தில் 7 இடங்களில் கால்நடை மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகம் முழுவதும் கால்நடை மருத்துவமனைகளில் 245 மருத்துவ வாகனங்கள் உள்ளது மேலும் 143 மருத்துவ உதவி வாகனங்கள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் வெற்றி மாடு ஆடு வழங்கும் திட்டம் கூடிய விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.
தமிழகம் முழுவதும் வெறிநாய் பிரச்சனைக்கு தீர்வு காண கருத்தடை ஊசிகள் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக தமிழகம் முழுவதும் 38 கருத்தடை மையங்கள் அமைக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வெறி நாய்களை கட்டுப்படுத்துவதற்கு கருத்தடை மையங்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
கடலூரில் 17 கோழிப் பண்ணைகளில் பறவை காய்ச்சல் இருந்த கோழிகள் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டன மேலும் அங்கு பணியில் இருந்தவர்களுக்கு உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு எந்த நோய்த் தொற்றும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் பறவை காய்ச்சல் சம்பந்தமாக பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை தமிழகத்தில் வேறு எங்கும் பறவைக் காய்ச்சல் இல்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.
தமிழக கால்நடை பராமரிப்பு துறையில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர், தமிழகத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் மருத்துவர் அல்லாத 2000 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது கரூர் கலெக்டர் பிரசன்னா ராமசாமி, கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் விஜயகுமார், துணை இயக்குனர் ஜெயராம் மற்றும் கால்நடை கரூர் கோட்ட உதவி இயக்குனர் கண்ணன், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் கன்னியப்பன் மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் மருத்துவர்கள் பிரேம்குமார், கோகுல், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா, தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் நகர தவெக நிர்வாகிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அமைச்சர் ஆய்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.







