திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த செக்கஞ்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான நவீன அரிசி ஆலை கடந்த ஆறு மாதங்களாக இயங்கி வருகின்றன. மேலும் அரிசி ஆலையை சுற்றி சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களை வசித்து இந்நிலையில், அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் சாம்பல் மற்றும் கழிவுநீர் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்,
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில்,
Buy Now ! Pay Daily !
குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் அரிசி ஆலையில் இருந்து தினந்தோறும் வெளியேறும் கழிவு நீர்களால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், மேலும் ஆலையிலிருந்து வெளியேறும் உமி துகள்களால், குழந்தைகள் சரீரம் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், இரவு நேரம் முழுவதும் இந்த அரிசி ஆலை செயல்படுவதால் அதிலிருந்து வெளியேறும் அதிக சத்தத்தால் குழந்தைகள் பெரியோர்கள் என ஊர் பொதுமக்கள், ஒவ்வொரு இரவும் தூக்கம் இன்றி தவித்து வருவதாக வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
எனவே குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் அதிநவீன அரிசி ஆலையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கவிதாவிடம், ஊர் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்ததாக தெரிவித்துள்ளனர்.






