← முகப்பு

பாக்., திரைப்படங்களை வெளியடக் கூடாது : மத்திய அரசு அறிவுறுத்தல்!

பாகிஸ்தான் திரைப்படங்களை இந்தியாவில் வெளியிடக்கூடாது என பிரபல ஓடிடி தளத்தை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பாக்., திரைப்படங்களை வெளியடக் கூடாது : மத்திய அரசு அறிவுறுத்தல்!

உலகளவில் வெளியாகும் திரைப்படங்களில் சிறிய பட்ஜெட் அல்லது பெரிய பட்ஜெட் திரைப்படம் என எதுவாக இருந்தாலும் சரி, அப்படத்தின் ஓடிடி ரைட்ஸ் எந்த நிறுவனத்திற்கு விற்கப்படுகிறது என்பது தயாரிப்பாளர்களின் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாகும்.

அந்த வகையில் உலகிலேயே ஓடிடி ரிலீஸில் தலைசிறந்து விளங்கும் இணையதள நிறுவனம் தான் நெட்பிளிக்ஸ். பெரிய ஹீரோக்களே இந்நிறுவனத்திடம் தங்களது படங்களை விற்க ஆர்வம் காட்டும் நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு உலக அளவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

பொதுவாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது அடுத்தடுத்த ஓடிடி ரிலீஸ் அறிவிப்புகளை சமூக வலைதளங்கள் மூலமாகவும், தனது அதிகாரப்பூர்வ நெட்பிளிக்ஸ் ஓடிடி ஆப்பிலும் வெளியிடும்.

அந்த வகையில், பாகிஸ்தான் சினிமா துறையை சேர்ந்த ஒரு வெப்சீரிஸ் தொடரை டிச.4 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்போவதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

பாகிஸ்தானை சேர்ந்த நடிகர்கள் பவாத் கான், மஹிரா கான் ஆகியோர் நடித்துள்ள, "ஜே பச்சே ஹைன் சாங் சமேத் லோ" என்ற வெப் சீரிஸ் தொடரை இந்தியாவிலும் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் இதற்கு கடும் எதிர்ப்பு வெளியாகி, இத்தொடரை நெட்பிளிக்ஸ் வெளியிட கூடாது என, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு நிறைய கடிதங்கள் வந்தது.

மேலும் திரைப்பட தொழிலாளர் சங்கம் மற்றும் மேற்கத்திய தொழிலாளர்கள் கூட்டமைப்பும் இந்த தொடருக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்தினர்.

இந்நிலையில் தொடர்ச்சியான எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து, பாகிஸ்தான் திரைப்படங்களை நம் நாட்டில் ஒளிபரப்பக் கூடாது என நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பஹல்காம் தாக்குதலுக்கு பின், பாகிஸ்தானைச் சேர்ந்த அனைத்து வகையான திரைப்படங்கள், வெப்தொடர்களை ஓட்டி தளங்களில் வெளியிட கூடாது என மத்திய அரசு ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் மிண்டும் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், மத்திய அரசு இந்த விஷயத்தியில் கடுமையான் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !