← முகப்பு

இப்படி ஒரு நடிப்பை பாத்தது இல்ல! – ’மகாராஜா’ படத்தை புகழ்ந்த ஹாலிவுட் நடிகர்!

தமிழில் விஜய் சேதுபதி நடித்து வெளியான ’மகாராஜா’ திரைப்படத்தை பார்த்த ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் படம் குறித்து பேசியது வைரலாகியுள்ளது.

இப்படி ஒரு நடிப்பை பாத்தது இல்ல! – ’மகாராஜா’ படத்தை புகழ்ந்த ஹாலிவுட் நடிகர்!

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து 2024ம் ஆண்டு வெளியான படம் ’மகாராஜா’. விஜய் சேதுபதியின் 50வது படமான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று தியேட்டர்களில் பெரும் வெற்றியடைந்தது. அதன் பின்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான மகாராஜா படத்தை உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ளவர்கள் பார்த்து வைரலான நிலையில் 17 நாடுகளில் அதிகம் பார்க்கப்படும் நெட்பிளிக்ஸ் படமாக மகாராஜா இருந்தது.

அதுமட்டுமல்லாமல் பல்வேறு சர்வதேச விருதுகளுக்கும் சென்று பல நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த மகாராஜா படத்திற்கு இந்திய அரசின் தேசிய விருதும் கிடைத்தது. சிறந்த நடிப்புக்காக சிறுமி சஞ்சனா விருதை வென்றார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்நிலையில்தான் தற்போது பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹேங்க்ஸ் ’மகாராஜா’ படத்தை பார்த்து வெகுவாக புகழ்ந்துள்ளார். ஃபார்ஸ்ட் கம்ப், கேட்ச் மீ இஃப் யூ கேன், டாவின்சி கோட், சல்லி என பல படங்களில் நடித்துள்ள டாம் ஹேங்க்ஸ், 2 முறை சிறந்த நடிப்பிற்கான ஆஸ்கர் விருதுகளை வென்றவர்.

சமீபத்தில் மகாராஜா படத்தை பார்த்த அனுபவம் குறித்து அகாடமி விருது குழு உறுப்பினர் கவிதா குப்தாவிடம் பேசியுள்ளார். அப்போது படத்தை மிகவும் புகழ்ந்தவர், முக்கியமாக சிறுமி சச்சனாவின் நடிப்பை பெரிதும் புகழ்ந்து பேசியுள்ளார். ”என்னால் அந்த பெண்ணை விட்டு வெளியே வர முடியவில்லை. என்ன ஒரு அற்புதமான நடிப்பு. என்னால் அதை செய்ய முடியுமா தெரியவில்லை. ஆனால் அந்த வில்லனை நான் கொன்றிருப்பேன்” என கூறியுள்ளார்.

பொதுவாக உலகம் முழுவதும் எடுக்கப்படும் பல படங்கள் தமிழ் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படியான சூழலில் தமிழ் படம் ஒன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதும், ஹாலிவுட் நடிகர் வரை தமிழ் சினிமா நடிகர்களின் நடிப்பைக் கண்டு வியப்பதும் திரைப்பட ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !