← முகப்பு

மணி சார் என்ன பண்ணி வெச்சிருக்கீங்க? பார்த்து ஷாக் ஆன சாய் பல்லவி ரசிகர்கள்!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’இஞ்சி வெல்லம்’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ள நிலையில் அதைக் கண்டு சாய் பல்லவி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மணி சார் என்ன பண்ணி வெச்சிருக்கீங்க? பார்த்து ஷாக் ஆன சாய் பல்லவி ரசிகர்கள்!

தமிழில் நாயகன், தளபதி, அலைபாயுதே, பொன்னியின் செல்வன் என பல ஐக்கானிக் படங்களை இயக்கி வருபவர் மணிரத்னம். 1983 தொடங்கி தற்போது வரை பல தலைமுறை இளைஞர்களையும் ஈர்க்கும் வகையில் படங்களை அந்தந்த காலக்கட்டத்திற்கு ஏற்றபடி இயக்கி வருபவர் மணிரத்னம். 80ஸ் கிட்ஸுக்கு ஒரு மௌன ராகம், 90ஸ் கிட்ஸுக்கு ஒரு அலைபாயுதே, 2கே கிட்ஸுக்கு ஓ காதல் கண்மணி என பல தலைமுறைகளுக்கு காதல் ஹிட் கொடுத்தவரின் அடுத்த காதல் படம்தான் ’இஞ்சி வெல்லம்’

இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கின்றனர். வழக்கம்போல மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானே இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். முன்னதாக விஜய் சேதுபதி மணிரத்னம் இயக்கிய ’செக்க சிவந்த வானம்’ படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரம் நடித்திருந்தார். அப்போதே விஜய் சேதுபதியை வைத்து தனியாக ஒரு படம் பண்ண விரும்புவதாக மணிரத்னம் கூறியிருந்தார். அது காதல் படமாக இருக்கும் என்பது பலருக்கு சர்ப்ரைஸ்தான்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்த இஞ்சி வெல்லம் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வைரலான நிலையில், படத்திபன் முதல் பாடலான ’ஆச்சி.. ஆச்சி’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் சாய் பல்லவி ஒரு கர்ப்பவதியாக நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. முதல் பாடலே இப்படி ஒரு பாடலை வெளியிட்டிருக்கிறாரே மணிரத்னம் என பலர் வியந்தாலும், சாய் பல்லவியின் நடனத்திற்கு ரசிகர்களாக இருப்பவர்கள் இந்த பாடலால் சற்றே அப்செட் ஆனதாக தெரிகிறது. சாய் பல்லவிக்கு நல்ல டான்ஸ் உள்ள பாடலாக அமைந்தால் அவை யூட்யூபில் கோடிக்கணக்கில் வ்யூஸ் போகும் என்பதற்கு சாரங்கதரியா, ரவுடி பேபி பாடல்கள் சில உதாரணம்.

எனினும் இந்த ஒரு வருடத்திற்குள்ளேயே சீதையாக, கடுகடுப்பான போலீஸ் கதாப்பாத்திரமாக, தற்போது கர்ப்பவதியாக என வெவ்வேறு மாடுலேஷன்களில் சாய் பல்லவியின் நடிப்பு வெளிப்பட்டுள்ளது குறித்து பலரும் புகழ்ந்து வருகின்றனர். வழக்கம் போல ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ’ஆச்சி.. ஆச்சி’ ஆரம்பமே படத்தை எதிர்பார்க்க வைத்திருக்கிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !