நடிகர் விஜய் சேதுபதி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வருகிறார். தற்போது நடந்து வரும் பிக்பாஸ் ஷோவில் சட்டமன்றம் போன்றே ஒரு செட்டப்பில் ஹவுஸ் லீடர்களுக்கான விவாதம் நடக்கும் ஒரு இடம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் நடக்கும் விவாதங்களை, தொகுப்பாளர் விஜய் சேதுபதி வார இறுதியில் கருத்துகள் சொல்லி நடத்தி வந்தார். அதில் அவர் பேசும் கருத்துகள் மறைமுகமாக முதல்வர் விஜய்யின் ஆட்சியை விமர்சிக்கும் நோக்கில் உள்ளதாக சமூக வலைதளங்களில் பலர் விஜய் சேதுபதிக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து அறிந்த விஜய் சேதுபதி, பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே ”இங்கு பேசப்படும் விஷயங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சம்பவங்களை குறிப்பிடுபவை மட்டுமே. வேறு யாரையும், எந்த அமைப்பையும் விமர்சிப்பவை அல்ல” என்று கூறியிருந்தார். ஆனாலும் அவரையும், முதல்வர் விஜயையும் கம்பேர் செய்து வெளியாகும் விமர்சனங்கள் குறையவில்லை.
Buy Now ! Pay Daily !
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதியிடம் கேள்வி எழுப்பியபோது, முதல்வர் விஜய் குறித்தும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, ”விஜய் சாரை எனக்கு நடிகராக நன்றாக தெரியும். அவருடன் நான் வேலை செய்திருக்கிறேன். ஆனால் அரசியல் என்பது வேறு. அதை உட்கார்ந்து கவனித்து பார்த்து கருத்து சொல்வது என் வேலை இல்லை. அதை தாண்டி நமக்கு வேறு பல வேலைகள் இருக்கிறது.
அரசியல் என்பது வேலை அல்லது. அது ஒரு சேவை. நான் என்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்கிறேன். சிலருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தந்திருக்கிறேன். ஊரில் குளங்கள் வெட்டியிருக்கிறோம். சில குழந்தைகளை படிக்க வைத்திருக்கிறேன். என்னை பொறுத்த வரையில் இதுவே அரசியல்தான்.
அரசியல் கருத்து பேசுவது பற்றி எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அதை நாகரிகமாக ஏற்றுக்கொள்ளும் தன்மை இங்கு யாருக்கும் இல்லை. அது எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி. அதேசமயம் ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாக கவனித்து பின் தொடர்ந்து வர வேண்டும். முழுமையாக தெரிந்துக் கொள்ளாமல் பொதுவாக கருத்துகளை முன்வைப்பதால் எந்த பயனும் இல்லை” என பேசியுள்ளார்.






