← முகப்புசென்னை →

வி.எஸ்.பாபு மறைவு - அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்ட த.வெ.க கொடி!

கொளத்தூர் தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ் பாபு காலமானார். இதன் காரணமாக த.வெ.க கட்சி அலுவலத்தில் கட்சி கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

வி.எஸ்.பாபு மறைவு - அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்ட த.வெ.க கொடி!

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவையொட்டி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ்.பாபு, அன்று முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். சுவாசக் கோளாறு காரணமாக நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை நாளடைவில் மேலும் மோசமடைந்தது. இந்நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு நேற்று பிற்பகல் 2.24 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட வி.எஸ்.பாபு, முதலில் திமுகவில் இருந்தார். பின்னர் அதிமுகவில் இணைந்த அவர், 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டார்.அப்போது திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து அவர் பெற்ற இந்த வெற்றி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றது.வி.எஸ்.பாபுவின் மறைவையொட்டி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று முதல் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 7 நாட்களுக்கும் கழகத்தின் சார்பில் நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதுடன், கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !