← முகப்புசென்னை →

கொளத்தூர் உட்பட 6 தொகுதிகளில் இடைத்தேர்தல்: விரைவில் தேதி அறிவிப்பு!

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது

கொளத்தூர் உட்பட 6 தொகுதிகளில் இடைத்தேர்தல்: விரைவில் தேதி அறிவிப்பு!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தவெக சார்பில் வி.எஸ்.பாபு போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் வி.எஸ்.பாபு 82,997 வாக்குகளையும், மு.க.ஸ்டாலின் 74,202 வாக்குகளையும் பெற்றனர். அதிமுக வேட்பாளர் பி.சந்தான கிருஷ்ணன் 18,430 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் மு.க.ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார்.

75 வயதான வி.எஸ்.பாபு, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த நவம்பர் 19, 2026 அன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதி காலியானது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மறைந்தால், அந்தத் தொகுதிக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் விதிமுறையாகும். இதன் அடிப்படையில் கொளத்தூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலகம் தற்போது அறிவித்துள்ளது.

ஏற்கனவே திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. தற்போது கொளத்தூர் தொகுதியும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளதால், தமிழகத்தில் மொத்தம் ஆறு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !