← முகப்புசென்னை →

மின்சாரத்துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பாக, பணிக்கொடை உச்ச வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

மின்சாரத்துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

மிழ்நாடு மின் பகிர்மானக் கழக ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அவர்களுக்கான பணிக்கொடை உச்சவரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு நிதித்துறையின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், 2024 ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வுபெற்ற ஊழியர்கள் மற்றும் பணிக்காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் வரை நிலுவைத்தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே உயர்த்தப்பட்ட பணிக்கொடை சலுகையை மின்வாரிய ஊழியர்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தது. இதனைப் பரிசீலித்த அரசு, தற்போது பணிக்கொடை உச்சவரம்பை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், இந்தச் சலுகை பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் தகுதியான ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிதித்துறையின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு நிலுவைத்தொகை வழங்கப்படும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக மின்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும், பணிக்காலத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் இந்த உயர்வு கூடுதல் நிதிப் பாதுகாப்பை அளிக்கும் என்பதால், மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு வரவேற்பைப் பெற்றுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !