← முகப்புசென்னை →

பெரம்பூர் இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்ட வி.எஸ். பாபு உடல்... கண்ணீரில் உறவினர்கள்!

உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல், மருத்துவமனையில் இருந்து பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது

பெரம்பூர் இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்ட வி.எஸ். பாபு உடல்... கண்ணீரில் உறவினர்கள்!

சென்னை: கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் இன்று காலமானார்.அவருக்கு வயது (75).

நீண்டகால சுவாசப் பிரச்சினை மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பல்துறை மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும், இன்று பிற்பகல் 2.24 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

வி.எஸ்.பாபுவின் மறைவுக்கு தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, மக்களோடு மக்களாகப் பழகி அனைவரின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்றிருந்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனத் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும் வி.எஸ்.பாபு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அவர் உடல்நிலை தேறி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில்,அவரது திடீர் மறைவு அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின்,குடும்பத்தினருக்கும் கட்சியினருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே,மருத்துவமனையில் இருந்து வி.எஸ்.பாபுவின் உடல் பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு வரப்பட உள்ளதால், இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக உறவினர்களும் ஆதரவாளர்களும் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !