← முகப்புகாஞ்சிபுரம் →

கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை! காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தங்க தேர் உற்சவம்

கார்த்திகை மாதத்தை ஒட்டி கோவில் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபாடு

சக்தி பீட ஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்கும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், கார்த்திகை மாதம் என்பதால் தீபத் திருவிழா நடைபெறும் மாதமாக திகழும் வகையில் கார்த்திகை மாதம் முழுவதும் கோவிலில் உள்பிரகாரம் முழுவதும் குளக்கரை என அனைத்து பகுதிகளிலும் 1000க்கும் மேற்பட்ட அகல் விளக்கங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் கார்த்திகை மாத வெள்ளிக்கிழமையை ஒட்டி, தங்கத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தங்கத்தேர் உற்சவத்தை ஒட்டி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, ஆரஞ்சு நிற பட்டு உடுத்தி தங்க கிரீடங்கள், சிவப்பு பவள மாலை, திருவாபரணங்கள், பாக்கு மணி மாலை, மல்லிகைப்பூ, சம்பங்கி பூ, சாமந்திபூ கண்ணாடி வளையல் மாலைகள் அணிந்து, லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

பின்னர் மேளதாளங்கள் முழங்க உபயதாரர்கள், பக்தர்கள், தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்துச் செல்ல காஞ்சி காமாட்சி அம்மன், கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமை ஒட்டி நடைபெற்ற தங்கத்தேர் உற்சவத்தில் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம்,வெளி மாநிலம் என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "ஓம் சக்தி,பராசக்தி" கோஷமிட்டு காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர். விழா ஏற்பாடுகளை ஸ்தானிகர்கள் கோபி சாஸ்திரி. சங்கர் சாஸ்திரி. ஆலய மணியக்காரர் சூரிஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !