இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி திங்கட்கிழமை, திருச்செங்கோடு மோரூர் கரடு பின்புறம் களரன் குட்டை செல்லும் வழியில், குமரன் கோவில் அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காலி இடத்தில் ரசிகா கழுத்து, மார்பு, தொடை, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அந்த வழியாகச் சென்றவர்கள் பெண் சடலம் கிடப்பதைக் கண்டு அளித்த தகவலின் பேரில், திருச்செங்கோடு ஊரக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Buy Now ! Pay Daily !
இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், சம்பவத்தன்று காலை 10.30 மணியளவில் கணேசனுடன் பணம் வாங்குவதற்காக ரசிகா இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றது தெரியவந்தது. ஏற்கனவே கணவன், மனைவி இடையே மனக்கசப்பு இருந்து வந்த நிலையில், கடந்த 15 நாட்களாக கணேசனைப் பிரிந்து ரசிகா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
இதற்கிடையே, சந்தேகத்தின் அடிப்படையில் கணேசனைத் தேடிய போலீசாருக்கு, அவர் வெண்ணந்தூரில் கழுத்தை அறுத்துக் கொண்டு மயங்கிக் கிடந்ததும், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த நிலையில், கணேசனை கைது செய்த ஊரக போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மனைவி ரசிகாவின் நடத்தையில் கணேசனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்தது.
ரசிகா அடிக்கடி செல்போனில் பேசுவதும், கணேசன் அவருக்கு போன் செய்யும்போது பிஸியாக இருப்பதாகத் தகவல் வருவதும் அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், ரசிகாவிடம் செல்போனை கேட்டுள்ளார்.
ஆனால், அவர் செல்போனை லாக் செய்து வைத்திருந்ததுடன், பாஸ்வேர்டையும் தெரிவிக்காததால் கணேசனுக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கணேசனைப் பிரிந்த ரசிகா தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ரசிகாவைக் கொலை செய்யும் நோக்கில் அவரைத் தனியான இடத்திற்கு அழைத்துச் சென்ற கணேசன், அங்கு அவருடன் பேசியுள்ளார்.
அப்போது, கணேசனை மரியாதைக் குறைவாகப் பேசிய ரசிகா, அவர் குடிப்பழக்கத்தைக் கைவிடாததால்தான் பிரச்சினை ஏற்படுவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, தான் திருந்திவிட்டதாகவும், மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கணேசன் தெரிவித்துள்ளார்.
அப்போது ரசிகா தொடர்ந்து தரக்குறைவாகப் பேசியதால் ஆத்திரமடைந்த கணேசன், ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரசிகாவை உடலின் பல்வேறு இடங்களில் குத்திக் கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, கணேசன் மீது கொலை வழக்குப் பதிவு செய்த திருச்செங்கோடு ஊரக போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, கணேசனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.






