← முகப்பு

பதவியை ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்? – போலீஸ் சம்மன்!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு அம்மாவட்ட எம்.எல்.ஏ ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், வீடு புகுந்து அத்துமீறியதாகவும் எழுந்த புகார் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரித்து விளக்கமளிக்க தேசிய மகளிர் ஆணையம், உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் கடந்த ஜூலை மாதமே இதுகுறித்து புகார் அளித்திருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. அதை தொடர்ந்து எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் இன்றோ அல்லது நாளையோ கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகிறது. இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. கைதுக்கு முன்னதாக பதவியை ராஜினாமா செய்ய கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை அருள் விக்னேஷ் தனது பதவியை ராஜினாமா செய்தால், கண்டிப்பாக கைதாவது உறுதி என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில்..

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்கும் வரை இந்த வழக்கு தொடர்பான எந்த தகவல்களையும் வெளியிடக்கூடாது என்றும், இந்த உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கை விரைவாக விசாரித்து டிசம்பர் 22ம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் வீட்டிற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி கையில் கோப்புகளுடன் வந்த காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி ஐந்து நிமிடத்தில் புறப்பட்டு சென்றார். அருள் விக்னேஷிடம் வழக்குத் தொடர்பான சம்மன் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அடுத்த நடவடிக்கை என்ன என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !