← முகப்பு

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற தவெக அரசு தயங்குவது ஏன்? - அண்ணாமலை கேள்வி!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவை மதித்து தமிழகத்தில் ஆளும் தவெக அரசு செயல்பட வேண்டும் என வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற தவெக அரசு தயங்குவது ஏன்? - அண்ணாமலை கேள்வி!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், கடந்த ஆண்டு திமுக அரசு அதற்கு முட்டுக்கட்டை போட்டது. அதன்பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற தவெக அரசு நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து செயல்படும் என எதிர்பார்த்தோம்.

ஆனால், இந்த ஆண்டும் தீபம் ஏற்றத் தயாராக இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தவெக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. இருப்பினும், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை ஏற்று முருக பக்தர்களின் கோரிக்கையை தவெக அரசு நிறைவேற்ற வேண்டும்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

கடந்த ஆண்டைப் போலவே பல்வேறு காரணங்களைக் கூறி உத்தரவை நிறைவேற்ற மறுப்பது அல்லது தடை உத்தரவு பிறப்பிப்பது போன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபடாது என நம்புகிறோம்.கடந்த ஆண்டு திமுக அரசு, தீபத்தூண் சமணத் துறவிகளுடன் தொடர்புடையது என வாதிட்டது.

இந்த ஆண்டு தவெக அரசு, ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட மைல்கல் என வாதிட்டுள்ளது. இரு அரசுகளும் உண்மைக்கு மாறான வாதங்களை முன்வைத்துள்ளன. அவற்றை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. மேலும், முஸ்லிம் மக்களே விட்டுக்கொடுத்த ஒரு விவகாரத்தில் திமுக அரசு தேவையில்லாமல் தலையிட்டு இந்து - முஸ்லிம் மக்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தியது.அதேபோன்ற அணுகுமுறையை தவெக அரசும் பின்பற்றக் கூடாது.

35 சதவீத மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்தே விஜய்க்கு வாக்களித்துள்ளனர். ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், முந்தைய திமுக அரசு செய்ததையே தவெக அரசும் செய்வது ஏன்? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசின் நடவடிக்கை அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

தமிழக முதல்வர் விஜய் ஆட்சியைத் தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். வரும் ஜனவரி மாதத்தில் ஆறு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளது. இந்தத் தேர்தல் மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும். திராவிட அரசியலுக்கு மாற்றாக மக்கள் வாக்களித்துள்ள நிலையில், அந்த மாற்றம் வெற்றிபெற வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், லஞ்சம் குறைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தவெக அரசை ஆதரிக்கிறேன். அதற்காக மக்களைப் பாதிக்கும் முக்கியமான விவகாரங்களில் அரசு கோட்டை விட்டுவிடக் கூடாது என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !