← முகப்பு

தமிழ்நாடு அரசு மூலமாக துபாயில் வேலைவாய்ப்பு! – விண்ணப்பிப்பது எப்படி?

தமிழக அரசின் OMCL (Overseas Manpower Corporation Limited) மூலமாக துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் பணிக்கு செல்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு மூலமாக துபாயில் வேலைவாய்ப்பு! – விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசு சுயதொழில், வேலைவாய்ப்பை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல முயலும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் OMCL-ஐ செயல்படுத்தி வருகிறது. இதன்மூலமாக அங்கீகரிக்கப்பட்ட, நம்பகத்தன்மையான நிறுவனங்களுக்கு தமிழகத்திலிருந்து இளைஞர்கள் வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். வெளிநாடு வாழ் தமிழர்கள் மூலமாக நடைபெறும் அன்னிய செலவாணிக்கு இது ஒருவகையில் நல்ல பங்களிக்கிறது.

இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு நாடுகளான துபாய், அபுதாபியில் உள்ள தொழில்துறை நிறுவனங்களில் எலெக்ட்ரீசியன், எலெக்ட்ரீசியன் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளில் சேர்வோருக்கு இந்திய மதிப்பில் மாதம் ரூ.32 ஆயிரம் தொடங்கி, பணி, பதவிகளுக்கு ஏற்ப ரூ.2.8 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதியாக ஐடிஐ, டிப்ளமோ, பி.இ பொறியியல் உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 22 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. பணி அனுபவம் பணிப்பிரிவை பொறுத்து அமையும் என்றாலும் 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை இது மாறுபடும்.

இதில் கூடுதல் வசதிகளாக, கூடுதல் நேரம் வேலை பார்த்தால் அதற்கான ஊதியம், நிறுவனங்கள் மூலமாகவே தங்குமிடம், விசா வழங்க ஏற்பாடு உள்ளிட்டவை உள்ளன. இந்த பணிகளுக்கு ஆண் பணியாளர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

விரிவான தகவல்களுக்கு அரசின் அறிவிப்பை இங்கே காணலாம்:

job
job
job
job
Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !