சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்து 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் விலைவாசி அதிகரித்துள்ளது, வலுவான பொருளாதார வளர்ச்சி காணப்படவில்லை, முதலீடுகள், பெருநிறுவனங்கள் பிற மாநிலங்களை நோக்கிச் செல்கின்றன என வரிசையாக பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது. மேலும் சமீபத்தில் Tamilnadu Guidance முகமையில் நடந்த ராஜினாமா விவகாரங்கள் முதலீடுகள் குறித்த மேலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.
ஆட்சியமைத்த பிறகு சென்னையில் முதலீட்டாளர்கள் சந்திப்பு முதலமைச்சர் விஜய் தலைமையில் VETTRI முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் முதலீடு தொடர்பாக விஜய் பயணம் செய்தார். இதில் பல முதலீடுகளை தமிழக அரசு கவர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. தற்போது வரும் நவம்பர் 25 அன்று VETTRI முதலீட்டாளர் மாநாடு மீண்டும் நடைபெற உள்ளது.
Buy Now ! Pay Daily !
இந்நிலையில் கடந்த 6 மாத காலத்தில் தவெக அரசு முதலீடுகளை ஈர்க்க, தொழில் வளர்ச்சியில் என்னென்ன பணிகளை மேற்கொண்டுள்ளது என்பதை தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது.
அதில், தொழில் முதலீடுகளுக்கு 21 நாட்களுக்குள் அனுமதி வழங்கும் புதிய நடைமுறை, தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைப்பு, 11 துறைகளில் 25க்கும் மேற்பட்ட எளிதாக்கப்பட்ட தொழில் சீர்திருத்தங்கள், முதலீட்டு திட்டங்களை விரைவுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களோடு ஒப்பந்தம்
கடந்த ஆறு மாத காலத்தில் தொழில் நிறுவனங்களோடு மேற்கொள்ளப்பட்ட புதிய ஒப்பந்தங்களில் 112 திட்டங்களில் 83 திட்டங்களுக்கான நிலம் உறுதி செய்யப்படுதல் மற்றும் அதற்கு அடுத்த நிலைகளை எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 23 திட்டங்கள் ஒப்பந்தத்திற்கு அடுத்தப்படியாக நிலம் தேர்வு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டும் நிலையை எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மொத்தம் 17 நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் 5,870 பேருக்கு உயர்வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த விளக்க அறிக்கை தெரிவிக்கிறது.
1 லட்சம் வேலைவாய்ப்புகள்
இதுவரை வாகன உற்பத்தித் துறையில் ரூ.17,073 கோடியும், மின்னணுவியல் துறையில் ரூ.16,832 கோடியும், ஜவுளித்துறையில் ரூ.7,871 கோடியும் முதலீடுகள் பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இதன்மூலம் 1,32,771 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகவும் அரசின் செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.






