← முகப்பு

அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டும்! டிஜிபியிடம் உதயநிதி மனு!

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு அளித்துள்ளார்.

அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டும்! டிஜிபியிடம் உதயநிதி மனு!

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே இந்த விவகாரம் சர்ச்சையாகி வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ஜூலை மாதமே இது தொடர்பாக தலைமைச் செயலாளருக்கு புகார் அளித்தது தெரிய வந்துள்ளது.

ஜூலை மாதமே மாவட்ட ஆட்சியர் அளித்த புகாருக்கு முதல்வர் விஜய் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில் அருள் விக்னேஷ் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், அவர் கைதாகும் வாய்ப்புள்ளதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்நிலையில் இன்று சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு நேராக சென்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், பெண் ஆட்சியரிடம் அத்துமீறிய எம்.எல்.ஏ அருள் விக்னேஷை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ”புதிதாக ஆட்சிக்கு வரும் கட்சியின் முதல் 6 மாத காலத்தை ’ஹனிமூன் பீரியட்’ என்று சொல்வோம். நாம் அப்படிச் சொன்னதை அதே அர்த்தத்தில் முதலமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் புரிந்துக் கொண்டு விட்டார்கள் போல இருக்கிறது.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், பெண் மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதுடன், அவரது வீட்டிற்கு சென்று அத்துமீறியுள்ளார். இதுபற்றி பெண் ஆட்சியர் ஜூலை மாதமே தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்த நிலையில், அவர் நடவடிக்கை எடுக்காமல் வேறு மாவட்டத்திற்கு மாற்றல் வாங்கி செல்லும்படி கூறியிருக்கிறார். 116 நாட்களாக இந்த பிரச்சினை நடந்து வரும் நிலையில் நீதிமன்றம் தலையிட்டதால்தான் தற்போது FIR பதிவு செய்துள்ளனர். இந்த 116 நாட்களாக முதல்வர் விஜய் தூங்கிக் கொண்டிருந்தாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக டிஜிபியிடமே மனு அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !