அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தி, தனது வாழ்க்கை வரலாற்று நூலை சமீபத்தில் எழுதி வெளியிட்டார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர்களுடன் தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த புத்தகம் வெளியானது முதலே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. முக்கியமாக தனது கணவர் ராஜீவ் காந்தியை கொன்ற விடுதலைப்புலிகள் அமைப்பு குறித்த சோனியா காந்தியின் கருத்துகள் தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தின. அதுபோல விடுதலை போராட்ட வீரர் வீர் சாவர்க்கர் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக அவரது கொள்ளு பேரன் சத்யகி சாவர்க்கர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Buy Now ! Pay Daily !
அந்த நோட்டீஸில் ”சோனியா காந்தி வரலாற்று புத்தகத்தில், 201வது பக்கத்தில், காங்கிரஸ் போராட்டக்காரர்கள் பிரிட்டிஷ்க்கு எதிராக போராடி சிறைத் தண்டனைகளை பெற்றபோது, வீர் சாவர்க்கர் ஆங்கிலேயே அரசுக்கு கருணை மனு எழுதிக் கொண்டிருந்ததாகவும், மேலும் அவரது அமைப்பை சேர்ந்தவர்கள் பிரிட்டிஷ்காக உளவுத் தகவல் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கருத்து சாவர்க்கர் மற்ற போராட்ட வீரர்களுக்கு எதிராக ஆங்கிலேயர்களுடன் இணைந்து செயல்பட்டது போன்ற தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறது.
சாவர்கள் பல ஆண்டுகள் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்தமான் சிறையில் அவர் அனுபவித்த துன்பங்கள், நாட்டிற்காக செய்த தியாகங்களை, அவரின் போராட்ட பின்னணியை கருத்தில் கொள்ளாமல் அவர் மீது அவதூறு செய்யும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதே சுதந்திர போராட்ட வீரரான வீர் சாவர்க்கருக்குதான், இந்திராகாந்தி தான் பிரதமராக இருந்தபோது சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டதுடன், சாவர்க்கர் தேசிய நினைவகத்திற்கு நிதியுதவியும் அளித்தார் என அந்த நோட்டீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, சோனியா காந்தி தனது புத்தகத்தில் எழுதியுள்ள சர்ச்சைக்குரிய விஷயங்களுக்கு அவர் ஆதாரத்தை காட்டி நிரூபிக்க வேண்டும் அல்லது அதில் உள்ள தவறுகளை திருத்த வேண்டும். மேலும் நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் இதுகுறித்து பொதுவெளியில் விளக்கம் அளிப்பதோடு, மன்னிப்பும் கேட்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.






