பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பு, காஷ்மீரை பாகிஸ்தானின் பகுதி என பேசி வருவதோடு, அவ்வபோது காஷ்மீருக்குள் ஊடுறுவி பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. அவ்வப்போது இந்திய ராணுவம் நடத்தும் அதிரடி தாக்குதல்களில் பல பயங்கரவாதிகள் கொல்லப்படுகின்றனர்.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி காஷ்மீரில் உள்ள ஜங்கல்போரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக இந்திய ராணுவத்திற்கு கிடைத்த தகவலின்பேரில் அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த லத்தீப் பட் என்ற பயங்கரவாதி கொல்லப்பட்டான்.
Buy Now ! Pay Daily !
இதை தொடர்ந்து, லத்தீப் பட் கொலைக்கு பழிவாங்கும் விதமாக ஐதராபாத்தில் தாக்குதல் நடத்தப் போவதாக ஐதராபாத் போலீஸ் சிறப்பு பிரிவுக்கு வந்துள்ள மின்னஞ்சல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மின்னஞ்சலில், ஐதராபாத்தின் கச்சிக்குடாவில் உள்ள டூரிஸ்ட் ப்ளாசா ஓட்டல், கச்சிக்குடா ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்த உள்ளதாகவும், இதில் குறைந்தது 300 பேர் வரை கொல்லப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள ஐதராபாத் போலீஸ் மின்னஞ்சல் முகவரியை ட்ரேஸ் செய்ய முயன்று வருகின்றனர். அதேசமயம் ஐதராபாத்தின் முக்கியமான பகுதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் காவல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
சந்தேகத்திற்கிடமான நபர்கள், நடவடிக்கைகள் தென்பட்டால் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், விழிப்புடன் இருக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஐதராபாத் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






