← முகப்பு

குழாயை திறந்தால் சரக்கு வருது! பட காமெடி பாணியில் ஒரு சம்பவம்!

உத்தர பிரதேசத்தில் வீடு ஒன்றில் குழாயை திறந்தால் தண்ணீருக்கு பதிலாக கள்ளச்சாராயம் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழாயை திறந்தால் சரக்கு வருது! பட காமெடி பாணியில் ஒரு சம்பவம்!

நாடு முழுவதும் அனுமதிக்கப்பட்ட மது விற்பனை ஒருபக்கம் இருக்க, கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகள் பலவற்றில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் கும்பல்களின் செயல்பாடுகளும் அவ்வப்போது கண்டறியப்படுகின்றன. போலீஸாரின் கண்களுக்கு புலப்படாமல் கள்ளச்சாராயம் காய்ச்சவும், விற்கவும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் புதுப்புது உத்திகளை கையாண்டு வருகின்றனர். அவ்வாறான ஒரு உத்திதான் உத்தர பிரதேசத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வாறாக சமீபத்தில் ஜான்சி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை அதிகமாக இருப்பதாக அவர்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்று அவர்கள் சோதனை நடத்தியுள்ளனர். அங்குள்ள கிராமப் பகுதியில் சோதனை நடத்தியதில் அவர்களுக்கு கள்ளச்சாராய பீப்பாய்கள் எதுவும் கிடைக்கவில்லை.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்நிலையில் அங்கு வீட்டின் திண்ணையின் மீது அமைக்கப்பட்டிருந்த அடிக்குழாய் போலீஸாரின் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. அடிக்குழாயை அடித்து பார்த்தபோது அதிலிருந்து தண்ணீர் வராமல் சாராயமாக வந்துள்ளது. பின்னர் அந்த இடத்தை தோண்டியபோது சாராய பேரல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. போலீஸிடம் சிக்காமல் இருக்க சாராய பேரல்களை மண்ணில் புதைத்து வைத்து அடிபம்பு மூலமாக எடுத்து விற்பனை செய்து வந்த சாராய கும்பலின் பலே செயல் போலீஸாரையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

இதுத்தொடர்பாக சாராய பேரல்களை பறிமுதல் செய்த போலீஸார், சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !