← முகப்பு

ஐயப்ப பக்தர்களுக்கு என்ன ஆச்சு! சரிந்த சபரிமலை பக்தர்கள் வருகை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு சீசன் தொடங்கியுள்ள நிலையில் வழக்கத்தை விட குறைவான பக்தர்களே தரிசனத்திற்கு வந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்ப பக்தர்களுக்கு என்ன ஆச்சு! சரிந்த சபரிமலை பக்தர்கள் வருகை!

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் மண்டல பூஜை தொடங்கும்போது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் பயணத்தால் வாடகை வேன்கள், பேருந்துகள் பிஸியாகிவிடும். அந்தளவுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரள்வார்கள்.

நடப்பு ஆண்டிலும் தற்போது மண்டல பூஜை தொடங்கியுள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் சபரிமலை தேவசம்போர்டு பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்ததுடன், ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகளையும் முன்கூட்டியே வெளியிட்டது. ஆனாலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் இதுவரை குறைவான பக்தர்களே தரிசனத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

கடந்த ஆண்டு முதல் 6 நாட்களுக்குள் 5,01,045 பேர் தரிசனம் செய்த நிலையில், இந்த ஆண்டு 2,71,827 பேர் மட்டுமே தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட 2.29 லட்சம் பக்தர்கள் குறைந்துள்ளனர். ஆன்லைனில் முன்பதிவு செய்த பலர் தரிசனத்திற்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சபரிமலையில் காணிக்கை மற்றும் உண்டியல் வருவாயும் வெகுவாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டை விட 46 சதவீதம் பக்தர்கள் வருகை சரிந்துள்ள நிலையில் இதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யும் முனைப்பில் தேவசம்போர்டு உள்ளது.

அதேசமயம் பலரும் மகர விளக்கு தரிசனத்தை திட்டமிட்டு பயனத்தைத் தொடங்குவது சமீப ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது. அதனால் தொடக்க நாட்களில் பக்தர்கள் வருகை குறைவாக தெரிந்தாலும் மகரவிளக்கு நாட்களில் மேலும் கூட்டம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !