← முகப்பு

டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாறிய கெஜ்ரிவால் பங்களா! வைரலாகும் வீடியோ!

டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடைய பங்களாவை தற்போதைய டெல்லி அரசு பொதுப்பார்வைக்கான ம்யூசியமாக மாற்றியுள்ள நிலையில் இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாறிய கெஜ்ரிவால் பங்களா! வைரலாகும் வீடியோ!

டெல்லி முன்னாள் முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் மீது டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் மற்றும் பணமோசடி வழக்குப் பதியப்பட்ட நிலையில், கடந்த 2024ம் ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் டெல்லி முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புதுப்பிப்பதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்குகளில் மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் பிப்ரவரி மாதம் அவரை டெல்லி நீதிமன்றம் விடுவித்தது.

இதற்கிடையே நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் கடந்த ஆண்டு பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் வாழ்ந்த ஷீஸ் மஹாலை (Sheesh Mahal) ஒரு அருங்காட்சியகமாக மாற்றி, அதில் உள்ள ஆடம்பர பொருட்களை காண நபர் ஒருவருக்கு ரூ.20 கட்டணம் நிர்ணயித்து இன்று திறந்து வைத்துள்ளனர். இந்த பங்களாவின் மொத்த மதிப்பு ரூ.58.83 கோடி என அங்கு விலை குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த பங்களாவில் உள்ள ஒவ்வொரு அறையும் யாருடையவை, அங்குள்ள பொருட்களின் விலை மதிப்பு என்ன என்ற விலைப் பலகை ஒவ்வொரு இடத்திலும் வைக்கப்பட்டுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

அதில் கெஜ்ரிவால் மகனின் பெட்ரூம் மதிப்பு ரூ.1.11 கோடி என்றும், மகளின் பெட்ரூம் மதிப்பு ரூ.83 லட்சம் என்றும், ஒவ்வொரு படுக்கையின் மதிப்பு ரூ.4 லட்சம், டிவி யூனிட் ரூ.30 லட்சம் என அனைத்திற்கும் விலைக் கார்டு ஒட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வரும் நிலையில், தன்னை மிகவும் எளிமையான ஒரு முதல்வர் என கூறிக்கொண்ட கெஜ்ரிவால் எவ்வளவு ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார் என்பதை காட்டுவதற்காக இந்த பங்களாவை மக்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளதாக டெல்லி பாஜக தெரிவித்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !