← முகப்பு

மதுரை ரயில் நிலையம் மீது தீபம் ஏற்றுவோம்! – மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்காததை கண்டித்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மதுரை ரயில் நிலையம் மீது தீபம் ஏற்றுவோம் என பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ரயில் நிலையம் மீது தீபம் ஏற்றுவோம்! – மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

மதுரை, திருப்பரங்குன்றத்தில் மலை உச்சி மீது உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்ட நிலையில், அதை தமிழக அரசு பின்பற்றாமல் தீபம் ஏற்றாமல் விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் இந்த செயலை தமிழக பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டித்துள்ளன. இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்த திட்டமிட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து நேற்று பேசிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ”தமிழ்நாடு அரசு செயல்படாமல் இருக்கிறது. ஒரு தீபம் ஏற்றுவதை நிறுத்துவதன் மூலம் லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளீர்கள். இன்று ஒரு தீபத்தை ஏற்றவிடாமல் நிறுத்திய நீங்கள், அடுத்து யாருமே கோயிலுக்குப் போகக் கூடாது என சொல்வீர்களா? இதுதான் நீங்கள் விரும்புவதா?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் மதுரை ரயில் நிலையத்தின் உச்சியில் தீபம் ஏற்றப்படும் என அவர் பேசியுள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

அவரது இந்த பேச்சுக்கு இடதுசாரி அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சமூக அமைதியை குலைக்கும் வகையில் அமைச்சர் பேசுவதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ” “புனரமைக்கப்படும் மதுரை ரயில் நிலையத்தின் உச்சியில் தீபம் ஏற்றப்படும்” என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியுள்ளார். அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, நீங்களோ, உங்களின் கூட்டமோ ஒருபோதும் ரயில் நிலையத்தின் உச்சியில் தீபமேற்ற முயற்சிக்க மாட்டீர்கள்; ஏனென்றால் மதுரை ரயில் நிலைய வளாகத்தில் எந்த தர்ஹாவும் இல்லை” என கூறியுள்ளார்.

தொடர்ந்து திருப்பரங்குன்றம் விவகாரம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் அடுத்தடுத்து வரும் நாட்களில் இந்த விவகாரம் மேலும் தீவிரமடையக்கூடும் என பேசிக் கொள்ளப்படுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !