சம்பவத்தின் பின்னணி:
தங்களது நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற 'Asian Paints Trucare wall Primer' பெயரில் போலியான பெயிண்ட் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக, கடந்த 15.10.2026 அன்று ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் சார்பில் திருநெல்வேலி அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவில் (IPREC) புகார் அளிக்கப்பட்டது.
Buy Now ! Pay Daily !
இதனை அடுத்து தனிப்படையினர் கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். முதற்கட்டமாக, 'எஸ்தர் ஹார்டுவேர்ஸ்' என்ற கடையில் நடத்திய சோதனையில் 20 லிட்டர் அளவு கொண்ட 17 போலி ஏசியன் பெயிண்ட்ஸ் பிரைமர் வாளிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளர் பிரவீன் என்பவரிடம் நடத்திய விசாரணையில், மணிகண்டன் என்பவர் இவற்றை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 14.11.2026 அன்று மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரித்ததில், நாகர்கோவில் மேலசங்கரன்குழி குரண்டி பகுதியில் உள்ள 'ரெயின்போ கலர்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் அஜின் குமார் என்பவர் இவற்றைத் தயாரித்துக் கொடுத்தது அம்பலமானது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்:
பிரபல நிறுவனங்களின் வாளிகள் மற்றும் ஸ்டிக்கர்களைப் போலியாகத் தயார் செய்து தரமற்ற பொருட்களை நிரப்பி விற்பனை செய்த அஜின் குமாரின் இடத்திலிருந்து சுமார் ரூ. 75,000 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன:






