← முகப்பு

இனி உங்களுக்குப் பதிலாக ஷாப்பிங் செய்யும் ChatGpt!

ChatGPT மூலம் இனி பொருட்களைத் தேர்வு செய்வது மட்டுமின்றி, பயனர்களின் அனுமதியுடன் ஆன்லைனில் பணம் செலுத்தி பொருட்களை வாங்கவும் முடியும். இதற்காக ChatGPT Wallet என்ற புதிய வசதியை OpenAI அறிமுகப்படுத்தியுள்ளது.

இனி உங்களுக்குப் பதிலாக ஷாப்பிங் செய்யும் ChatGpt!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் தொடர்ந்து புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் OpenAI நிறுவனம், தற்போது ஆன்லைன் ஷாப்பிங்கை எளிதாக்கும் வகையில் ChatGPT Wallet என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ChatGPT-யின் AI ஏஜென்ட்கள் பயனர்களுக்குத் தேவையான பொருட்களைத் தேடுவது, விலைகளை ஒப்பிடுவது, பொருட்களைத் தேர்வு செய்வது என ஷாப்பிங் தொடர்பான பல வேலைகளைச் செய்ய உதவும். அதுமட்டுமின்றி, பயனர்களின் அனுமதியுடன் இறுதியாகப் பணம் செலுத்தி பொருட்களை வாங்கவும் முடியும்.

ChatGPT Wallet வசதிகள்

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

முதலில், பயனர்கள் தங்களுடைய தகுதியான கடன் அட்டைகளை இந்தப் பணப்பையுடன் இணைக்க வேண்டும். பின்னர், வாங்க விரும்பும் பொருட்களைப் பற்றிக் கூறினால், செயற்கை நுண்ணறிவு அவற்றைத் தேடி, விலைகளை ஒப்பிட்டு, பொருத்தமான தேர்வுகளைப் பட்டியலிடும். பணம் செலுத்துவதற்கு முன்பாக, வாங்கவிருக்கும் பொருட்கள் மற்றும் மொத்தத் தொகையைப் பயனர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். அதன்பிறகு முக அடையாளம் அல்லது கைரேகை மூலம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே பரிவர்த்தனை நிறைவு பெறும்.

மேலும், பயனர்களின் உண்மையான வங்கி அட்டை விவரங்கள் விற்பனையாளர்களுடன் நேரடியாகப் பகிரப்படாது. அதற்குப் பதிலாக பாதுகாப்பான டிஜிட்டல் கட்டண முறையான Payment Token முறை கூடுதல் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படுகிறது.

தற்போதைக்கு அமெரிக்காவில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட குறிப்பிட்ட ChatGPT Pro சந்தாதாரர்களுக்கு மட்டுமே இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் வழங்கப்பட்ட விசா, மாஸ்டர்கார்டு மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அட்டைகளுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது.

எதிர்காலத்தில் பயனர்கள் தங்களுடைய ஷாப்பிங் செலவுகளுக்கு வரம்பு நிர்ணயிப்பது, குறிப்பிட்ட பொருட்களை வாங்க முன்கூட்டியே அனுமதி வழங்குவது போன்ற வசதிகளையும் அறிமுகப்படுத்த OpenAI திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் எதிர்காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங்கில் மனிதர்களுக்குப் பதிலாக AI ஏஜென்ட்களே பல வேலைகளைச் செய்யும் புதிய மாற்றம் உருவாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !