தமிழகத்தின் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சி 6 மாதங்களை கடந்துள்ள நிலையில் சட்டம், ஒழுங்கு சரியாக இல்லை என எதிர்கட்சி தலைவர்கள் பலரும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். அதற்கேற்ப சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியான சர்ச்சை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தவெகவின் 6 மாத கால ஆட்சி குறித்து விமர்சித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். அதில் அவர் ”6 மாத காலமாக தமிழகத்தில் ஒரு ஆட்சி நடந்துக் கொண்டிருக்கிறது. மன்னிக்க வேண்டும். ஆட்சி என்று சொல்வதை விட அது ஒரு காட்சி என்றுதான் சொல்ல வேண்டும். அது வெத்துவெட்டாக ஒரு சீன் காட்டுவதை போன்ற ஆட்சியாக உள்ளது.
Buy Now ! Pay Daily !
மாற்றம், மாற்றம் என்று சொன்னார்கள். அது தமிழக மக்களை பொறுத்தவரை ஏமாற்றமாக மாறியுள்ளது. சினிமாவில் ஹீரோவாக நடித்து, தற்போது உண்மையில் வில்லனாக இருக்கக் கூடிய ஒருவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறார். தமிழகத்திலே பல பகுதிகளில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்திருக்கிறது. அதிலே பெரும்பாலும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.
அண்மையிலே காரமடை தவெக ஒன்றிய செயலாளர் பாலியல் வழக்கில் தலைமறைவாகியிருக்கிறார். இன்றைய சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரை மாற்றி ’பாலியல் சுரண்டல் கழகம்’ என்றுதான் பெயர் வைக்க வேண்டும். அண்மையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கே தவெக எம்.எல்.ஏவால் ஏற்பட்ட பிரச்சினைகளை பார்த்தோம். ஒரு மாவட்ட ஆட்சியரையே இந்த நிலைமைக்கு ஆளாக்குகிறார்கள். இதுகுறித்து முதலமைச்சர் வாய் திறக்கவில்லை” என்று பேசியுள்ளார்.






