← முகப்பு

ஒரு கம்யூனிஸ்ட் ஆடம்பரமா இருக்கலாமா?: வலுக்கும் சு.வெங்கடேசன் – ஜி.ஆர்.சுவாமிநாதன் வார்த்தை மோதல்!

மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கம்யூனிஸ்ட் ஆடம்பரமா இருக்கலாமா?: வலுக்கும் சு.வெங்கடேசன் – ஜி.ஆர்.சுவாமிநாதன் வார்த்தை மோதல்!

சமீபத்தில் கோவை பெரியார் அறிவுலகத்தில் உள்ள புத்தகங்களில் அகல்விளக்கு, பீனிக்ஸ் என்ற பதிப்பகங்களின் பெயரில் போலியான நூல்கள் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எழுத்தாளர் பெருமாள் முருகன் சுட்டிக்காட்டியதின் பேரில் விஸ்வரூபமெடுத்த இந்த விவகாரத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஆயிரக்கணக்கான போலி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் குறித்து நூலக அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கவும், போலி புத்தகங்களை தயாரித்த அகல்விளக்கு பதிப்பகம் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ”போலி புத்தகங்களை வைத்ததால் நூலகத்திற்கு ஏற்பட்டுள்ள பாவத்தை மகா பெரியவரின் புத்தகங்களை வைப்பதன் மூலம் கழிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.

அவரது இந்த பதிவிற்கு மதுரை எம்.பியும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் ஆட்சேபணை தெரிவித்து பதிவிடுகையில், "பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்குகளில் பாவங்கள் கழிய வேண்டுமென்றால், மகா பெரியவருடைய புத்தகங்களை அதில் அடுக்கி வைக்க வேண்டும்" என்று நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் கூறியுள்ளார். நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை. நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை. சட்டத்தின் ஞானத்திற்காக அம்பேத்கரும், பகுத்தறிவின் ஞானத்திற்காக பெரியாரும் நாள்தோறும் நினைக்கப்படும் "மகா பெரியவர்கள்" என கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது பேசியுள்ள நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ”நான் புத்தக விவகாரம் குறித்து நகைச்சுவையாக பேசிய விஷயத்தை சு.வெங்கடேசன் சீரியஸாக எடுத்துக் கொண்டு பேசுகிறார். எனது பணியை நான் எப்படி செய்ய வேண்டும் என சொல்கிறார். அவர் ஒரு கம்யூனிஸ்டாக இருந்துக் கொண்டு ஆடம்பரமான் ஆடை அணிகிறார். ரயிலில் முதல் வகுப்பில் பயணிக்கிறார். ஒரு கம்யூனிஸ்ட் எம்.பி இப்படி ஆடம்பரமாக இருக்கலாமா?” என கேட்டுள்ளார்.

தொடர்ந்து நீதிபதிக்கும், நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையேயான இந்த வார்த்தை மோதல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !