← முகப்பு

அமெரிக்காவை புரட்டிப் போட்ட ‘நார்-ஈஸ்டர்’ புயல்!

அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகளைத் தாக்கிய கடுமையான புயல் காரணமாக, நியூயார்க்கின் புகழ்பெற்ற ‘மேசிஸ் தேங்க்ஸ்கிவிங் தின அணிவகுப்பு’ அதன் 100 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை புரட்டிப் போட்ட ‘நார்-ஈஸ்டர்’  புயல்!

அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளைப் பாதித்துள்ள சக்திவாய்ந்த ‘நார்-ஈஸ்டர்’ புயல் காரணமாகப் பல மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டின் மிக முக்கியமான விடுமுறைப் பயணக் காலமான வியாழக்கிழமையன்று வீசிய இந்தப் புயலால் பலத்த மழையும் சூறாவளிக் காற்றும் ஏற்பட்டது. இதனால் நியூ ஹாம்ப்ஷயர் முதல் வட கரோலினா வரை மரங்களும் மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

மின்சாரத் தடைகளைக் கண்காணிக்கும் 'PowerOutage.us' இணையதளத் தகவலின்படி, வெள்ளிக்கிழமை வரை சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்திலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 1,600 விமானங்கள் தாமதமாகியும், 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டும் உள்ளன.

100 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை

அமெரிக்காவில் இறைவனுக்கும், இயற்கைக்கும், நன்றி தெரிவிக்கும், ‘தேங்க்ஸ் கிவிங்’ விடுமுறைக் கொண்டாட்டங்கள் மக்கள் தயாரகியிருந்த நிலையில், ‘நார்-ஈஸ்டர்’ புயல் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களைப் புரட்டிப் போட்டுள்ளது. இதன் காரணமாக ’மேசிஸ் தேங்க்ஸ்கிவிங் தின அணிவகுப்பு' ஒத்திவைக்கப்பட்டு சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த அணிவகுப்பின் 100 ஆண்டுகால வரலாற்றில், வானிலை காரணமாக இது ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பார்க்கப்படும் இந்த வருடாந்திர விழாவில், வண்ணமயமான பிரம்மாண்ட பலூன்கள் மன்ஹாட்டன் நகரின் மையப்பகுதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அமெரிக்காவின் விடுமுறைக் கால ஷாப்பிங் சீசனின் தொடக்கமாகவும் இது பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக 1971-ம் ஆண்டு குளிர், மழை மற்றும் பலத்த காற்று காரணமாக 'டொனால்ட் டக்' உள்ளிட்ட பலூன்கள் பறக்கவிடப்படாமல் நிறுத்தப்பட்டதே இந்த அணிவகுப்பில் ஏற்பட்ட பெரிய இடையூறாக இருந்தது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !