← முகப்பு

பெஞ்சில் தனியாக அமர்ந்து அழுத பெண்ணுக்கு ரூ.2,500 அபராதம்!

ஜெர்மனியில் குழந்தைகள் இல்லாமல் விளையாட்டு மைதானத்தின் பெஞ்சில் அமர்ந்து அழுதுகொண்டிருந்த 31 வயது பெண்ணுக்கு, நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பெஞ்சில் தனியாக அமர்ந்து அழுத பெண்ணுக்கு ரூ.2,500 அபராதம்!

ஜெர்மனியின் கெல்சன்கிர்ச்சென் நகரில் ஹானா என்ற 31 வயதுப் பெண் வசித்து வந்துல்ளார். இவர் தனது படிப்பு மற்றும் நிதி நெருக்கடி காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

ஹானா கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி சற்று தனிமையில் இருக்க விரும்பி நடைப்பயிற்சி சென்றார். அப்போது அங்கிருந்த குழந்தைகள் விளையாட்டு மைதானத்தின் பெஞ்சில் அமர்ந்து தனது அத்தைக்கு கால் செய்து பேசிக்கொண்டே அழுதுள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

அப்போது அங்கு வந்த மூன்று நகராட்சி அதிகாரிகள், அங்கிருந்த ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்களைக் காட்டி, அவர்கள் ஹானாவின் குழந்தைகளா எனக் கேட்டுள்ளனர்.

அதற்கு ஹானா இல்லை என்று பதிலளித்ததும், உடனடியாக அவருக்கு 25 யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,540) அபராதம் விதித்தனர்.

கெல்சன்கிர்ச்சென் நகராட்சி விதிகளின்படி, விளையாட்டு மைதானங்கள் 14 வயது மற்றும் அதற்குட்பட்ட குழந்தைகளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டவை. பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் உட்பட பெரியவர்கள், குழந்தைகளுடன் வந்தால் மட்டுமே மைதானத்திற்குள் இருக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த விதி தெரியாமல் அமர்ந்திருந்த ஹானாவுக்கு அதிகாரிகளின் இந்தச் செயல் மிகுந்த கோபத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஹானா கூறுகையில், "இதில் மனிதநேயம் எங்கே இருக்கிறது? ஒருவர் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தால், முதலில் 'நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? ஏதாவது உதவி தேவையா?' என்றுதானே கேட்க வேண்டும்? அதன்பிறகு குழந்தைகள் இல்லாமல் இங்கு அமரக் கூடாது என்ற விதியை எனக்கு விளக்கியிருக்கலாமே" என வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு உள்ளூர் மக்களும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்: "சற்று ஓய்வெடுக்க விரும்பிய ஒரு பெண்ணைத் தண்டிப்பது அபத்தமானது" என ஒருவரும், "நான் இங்கு 64 ஆண்டுகளாக வசிக்கிறேன், எப்போதும் இந்த பெஞ்சில் அமர்வதுண்டு; இதுவரை யாரும் வந்து சோதனை செய்ததில்லை" என ஒரு பெண்ணும் கூறியுள்ளனர். மற்றொரு குடியிருப்பாளர் இதை "அக்கிரமமான செயல்" என விமர்சித்துள்ளார்.

ஆனால், நகர சபை அதிகாரிகளின் நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளது. இதுகுறித்து கவுன்சில் உறுப்பினர் சைமன் நோவாக் கூறுகையில், "குழந்தைகள் விளையாட்டு மைதானங்கள் குழந்தைகளுக்கானவை. எனவே, குழந்தைகள் இல்லாமல் பெரியவர்கள் அங்கு இருக்கப் பொதுவாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.

விளையாட்டு மைதானங்களை அங்கீகரிக்கப்படாத நபர்கள் பயன்படுத்துவதைத் தடுக்கவும், குழந்தைகள் கடத்தப்படும் அபாயத்தைக் குறைக்கவுமே இந்த அபராதம் விதிக்கப்படுவதாக நகராட்சி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

இதற்கிடையில், விளையாட்டு மைதானங்களை அனுமதியின்றிப் பயன்படுத்துவதற்கான தனியாக அபராதத் தொகையை 55 யூரோக்களிலிருந்து 60 யூரோக்களாக உயர்த்துவது குறித்தும் நகர சபை தற்போது ஆலோசித்து வருகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !