தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநருடன் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரும் மருத்துவமனையில் இருந்து கவனித்து வருகின்றனர்.
இதற்கிடையே, வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் உடல்நலக் காரணத்திற்காக சிகிச்சை பெறுகிறாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இதுகுறித்து ஆளுநர் மாளிகை தரப்பிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
Buy Now ! Pay Daily !






