← முகப்பு
அண்மைச் செய்திகள்

கோயம்புத்தூர்

பக்கம் 1 / 1
திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகனை கோவை, மாவட்டம் அன்னூரில் தடுத்து நிறுத்திய போலீசார்.கோயம்புத்தூர்

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற எல்.முருகன் தடுத்து நிறுத்தம்!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு செல்ல முயன்ற முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகனை கோவை மாவட்டம் அன்னூரில் போலீசார் தடுத்து நிறுத்தி மேட்டுப்பாளையம் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து அவர் போலீசாரின் நடவடிக்கைக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோயம்புத்தூர்

மேகதாதுவில் அணை! தமிழக அரசு நிலையான முடிவை எடுக்கவில்லை! - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் செயல்பாடுகள்! தமிழக அரசு நிலையான முடிவை எடுக்கவில்லை என்றால் பாதிக்க படுவது நமது தலைமுறைகள் தான்! தமிழக ஆட்சிக்கு தொடர் பின்னடைவு ஏற்படுவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

கோயம்புத்தூர்

மருதமலையில் 837 படிக்கட்டுகளில் பரதநாட்டிய அபிநயத்துடன் ஏறி 8-ம் வகுப்பு மாணவி பிரார்த்தனை!

முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வரும் கார்த்திகை தீபத் திருநாளன்று மகா தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் 837 படிக்கட்டுகளையும் பரதநாட்டிய அபிநயத்துடன் ஏறி நூதன முறையில் பிரார்த்தனை செய்தார்.

கோயம்புத்தூர்

கோவையில் 5 லட்சம் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது! - அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோவை மாணவர்களுக்கு 5 லட்சத்து 32 ஆயிரம் சைக்கிள்கள் வழங்க 277 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். டெண்டரில் தகுதி பெற்று, குறைந்த விலையைக் குறிப்பிடும் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்படும் எனக் கூறிய அவர்,இந்த ஆண்டு ஹெல்மெட், தண்ணீர் பாட்டிலுடன் ஸ்போர்ட்ஸ் சைக்கிள்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்கோயம்புத்தூர்

தவெக ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிடும்- டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!

முதலமைச்சர் விஜய் சினிமாவில் ஹீரோ ஆனால் உண்மையில் வில்லன் என விமர்சித்துள்ள அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன், கமல்ஹாசனின் சண்டியர் படத்திற்கும் தேவர் சமுதாயத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும் எனவே புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இதனை அரசியலாக கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

கோயம்புத்தூர்

புத்தகக் கொள்முதலில் முறைகேடு: கோவை பெரியார் அறிவுலகத்தில் சோதனை!

கோவையில் புதிதாகத் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.