இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ், மம்முட்டி மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ஓம். ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இத்திரைப்படம், கடந்த நவம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களிடம் பெரிய எதிபார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி ஆன்லைனில் விறுவிறுப்பாக நடந்தது. இந்த ஆன்லைன் புக்கிங்ஸ் முதல் நாள் வசூலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா? இது தனுஷின் முந்தைய படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடிக்குமா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
Buy Now ! Pay Daily !
பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களைக் கண்காணிக்கும் சாக்னில்க் தகவல்படி, இப்படம் முதல் நாளில் உலகளவில் மொத்தம் 31.55 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தியாவில் 6,628 காட்சிகளில் திரையிடப்பட்ட இப்படம், நிகர வசூலாக 17.70 கோடியையும், மொத்த வசூலாக 20.55 கோடியையும் ஈட்டியுள்ளது.
இதில் தமிழ் பதிப்பில் அதிகபட்சமாக 13.35 கோடியை வசூலித்துள்ளது. தெலுங்கு பதிப்பில் ₹4 கோடியும், இந்தியில் 35 லட்சமும் வசூலித்துள்ளது. வெளிநாட்டுச் சந்தைகளில் முதல் நாளில் மட்டும் சுமார் ₹11 கோடி வசூல் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் உலகளாவிய மொத்த வசூல் 31.55 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த முதல் நாள் வசூல் மூலம், தனுஷின் முந்தைய பல படங்களின் முதல் நாள் சாதனைகளை 'ஓம்' முறியடித்துள்ளது. இதற்கு முன்னர் 6.20 கோடி ரூபாய் வசூலித்திருந்த 'கர' படத்தை இது எளிதாகக் கடந்துள்ளது. மேலும், 'ராயன்' மற்றும் 'குபேரா' ஆகிய படங்களின் தொடக்க வசூலையும் முந்தியுள்ளது.
முக்கியமாக, 16 கோடி ரூபாய் வசூலித்து தனுஷின் மிகப்பெரிய ஓப்பனிங் படமாக இதுவரை இருந்த 'தேரே இஷ்க் மெயின்' சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனுஷின் முதல் நாள் வசூலில் புதிய மைல்கல்லை 'ஓம்' எட்டியுள்ளது.





