நமது வீடுகளில் பெரும்பாலும் சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய்ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில் பயன்படுத்துவதே வழக்கம். இந்த அணைத்து எண்ணெய் அனைத்தும் உண்மையிலேயே நமது உடலுக்கு நல்லதா? பொதுவாக, ஆலிவ் எண்ணெய் உடலுக்கு மிகவும் நல்லது என கூறுகின்றனர். அதில் பல வகைகளும் உள்ளது. எந்த வகை எண்ணெய் நமது உடலுக்கு என்ன நன்மைகளை செய்கிறது என பார்ப்போம்.
ஆலிவ் எண்ணெய் நன்மைகள்
Buy Now ! Pay Daily !
குடல்: ஆலிவ் எண்ணெயில் உள்ள பாலிபினால்கள், குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு ஆதரவாக இருக்கும். வீக்கம்: இதில் ஓலியோகந்தால் என்ற சேர்மம் உள்ளது. இது அழற்சி, அதாவது வீக்கத்தைக் குறைக்கும் பண்பைக் கொண்டுள்ளது. ரத்த அழுத்தம்: இதில் உள்ள பாலிபினால்கள் ரத்த நாளங்கள் சிறப்பாகச் செயல்பட உதவும். அதன் மூலம் ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தையும் ஆதரிக்கும் என்று அவர் கூறினார்.

ஆழமான வறுத்தலுக்கு எந்த எண்ணெய்?
- ஆழமான வறுத்தல் உணவைச் சமைக்க ஆரோக்கியமான வழி அல்ல. ஆனாலும், எப்போதாவது அப்படிச் சமைக்க விரும்பினால், சரியான எண்ணெயைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.
- சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்: இதில் நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன.
- சுத்திகரிக்கப்பட்ட ஆலிவ் எண்ணெய்: இதில் ஆரோக்கியமான மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன.
- நெய்
- அவகேடோ எண்ணெய்

எல்லா ஆலிவ் எண்ணெயும் ஒன்றல்ல
கடையில் பல பெயர்களில் ஆலிவ் எண்ணெய் கிடைக்கிறது. ஆனால் அவை எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான நன்மை இல்லை. ஏனெனில், ஒரு எண்ணெயின் ஊட்டச்சத்து மதிப்பு, அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் எண்ணெய்: மிகக் குறைவாகப் பதப்படுத்தப்பட்டது. அதிக அளவு பாலிபினால்களையும் ஆக்ஸிஜனேற்றங்களையும் கொண்டுள்ளது. இவை உடலின் செல்களைச் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. வர்ஜின் ஆலிவ் எண்ணெய்: எக்ஸ்ட்ரா வர்ஜினை விட சற்று அதிகம் பதப்படுத்தப்படுகிறது. இன்னும் பல ஆரோக்கியமான சேர்மங்கள் இருந்தாலும், குறைந்த அளவில்தான் உள்ளன. இதில் லேசான சுவையும் இருக்கும். லைட், ப்யூர், சுத்திகரிக்கப்பட்ட ஆலிவ் எண்ணெய்: இவை அதிகம் பதப்படுத்தப்படுகின்றன. இவற்றிலும் லேசான சுவை இருக்கும்.
எந்த எண்ணெய் எடுத்துக்கொண்டாலும் எதில் பதப்படுத்தல் குறைவாக உள்ளதோ அதில்,எண்ணெயில் ஆரோக்கியச் சேர்மங்கள் அதிகம் என்பதை நினைவிலோ கொள்ளுங்கள். அதனால் ஆலிவ் எண்ணெய் அல்லது எந்த ஒரு எண்ணெய் வாங்கும்போதும் அதன் வகையைப் பார்த்து வாங்குவது நல்லது.






