நமது சருமம் அழகாவும், பொலிவாகவும் இருக்க விலையுயர்ந்த கிரீம்கள், அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், சருமத்தின் உண்மையான ஆரோக்கியம் நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவுகளிலும் உள்ளது. சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைத்தால் சருமத்தை இயற்கையாகவே ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் பராமரிக்க முடியும். அந்த வகையில், சரும மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 5 முக்கிய உணவுகளைப் பார்க்கலாம். 1. நெல்லிக்காய் நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது சருமத்தின் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்க உதவும் கொலாஜன் உற்பத்திக்கு முக்கியமானது. மேலும், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கிறது. 2. முட்டை முட்டையில் புரதம், வைட்டமின் பி12 மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை சரும செல்களின் வளர்ச்சி மற்றும் புதுப்பித்தலுக்கு உதவுகின்றன. ஆரோக்கியமாக சருமத்தைப் பராமரிக்க தினமும் முட்டையை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். 3. கேரட் கேரட்டில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இதனை நமது உடல் வைட்டமின் ஏ ஆக மாற்றுகிறது. இது சரும செல்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது. 4. பாதாம் பாதாமில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இது சரும செல்களை ஆக்ஸிஜனேற்ற பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும், சருமத்தின் இயற்கையான பாதுகாப்புத் தன்மையைப் பராமரிக்கவும் உதவுகிறது. 5. பூசணி விதைகள் பூசணி விதைகளில் துத்தநாகம் நிறைந்துள்ளது. இது சரும செல்களின் வளர்ச்சி, பழுதுபார்த்தல் மற்றும் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சருமப் பொலிவுக்கு உணவும் முக்கியம்! இந்த ஐந்து உணவுகளையும் அளவோடு அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது சரும ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். போதுமான தண்ணீர் குடிப்பது, நல்ல தூக்கம் மற்றும் சத்தான உணவுப் பழக்கம் ஆகியவற்றையும் பின்பற்றுவது அவசியம். வெளிப்புறப் பராமரிப்புடன் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் எடுத்து வந்தால் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
பொலிவான சருமத்திற்கு தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்!
சருமம் இயற்கையாகப் பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வைட்டமின்கள், புரதம் மற்றும் தாதுக்கள் சரும செல்களின் வளர்ச்சிக்கு உதவும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், போதுமான தண்ணீர், நல்ல தூக்கம் மற்றும் சத்தான உணவுப் பழக்கமும் சருமப் பொலிவுக்கு அவசியம்.


