← முகப்புநாமக்கல் →

எதிர்க்கட்சிகளின் விமர்சனம்... அமைச்சர் லோகேஷ் கொடுத்த அதிரடி பதில்!

தமிழகத்தில் லஞ்சம், ஊழல் இல்லாமல் ஆட்சி நடைபெறுவதாக அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனம்... அமைச்சர் லோகேஷ் கொடுத்த அதிரடி பதில்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கூனவேலம்பட்டிபுதூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் கோவிலில், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் லஞ்சம், ஊழல் இல்லாமல் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், இதனால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், பத்திரப்பதிவுத்துறை லஞ்சமில்லாத துறையாகச் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், ராசிபுரம் பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளைப் படிப்படியாக நிறைவேற்றி வருவதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, பல்வேறு பகுதிகளில் போதிய கழிப்பிட வசதிகள் இல்லாததால், அவற்றை ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அடுத்தடுத்த கட்டங்களில் பிற அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதனிடையே, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், அந்த விமர்சனங்கள் குறித்து தங்களுக்குக் கவலையில்லை என்றும், முதலமைச்சர் மற்றும் மக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும் கூறினார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !