← முகப்புசென்னை →

வி.எஸ்.பாபு மறைவு வடசென்னைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உருக்கமான இரங்கல்!

கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு , மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, வடசென்னை மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர் என்றும், அவரது இழப்பு ஒட்டுமொத்த வடசென்னைக்கும் பேரிழப்பு என தெரிவித்துள்ளார்.

வி.எஸ்.பாபு மறைவு வடசென்னைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா  உருக்கமான இரங்கல்!

சென்னை: கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவு குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, தமிழக வெற்றிக் கழகத்தின் கடினமான காலகட்டத்தில் தங்களுடனும், கட்சித் தலைவர் விஜய்யுடனும் இணைந்து பணியாற்றியவர் வி.எஸ். பாபு என நினைவுகூர்ந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வடசென்னையின் மக்களின் மொழியிலும், அவர்களின் வாழ்வியலிலும் நன்கு அறிந்தவராக வி.எஸ். பாபு இருந்தார் என்றும், எப்போதும் சிரித்த முகத்துடன் பழகக்கூடியவர் என்றும் குறிப்பிட்டார். மேலும், கொளத்தூர், பெரம்பூர், வில்லிவாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் மக்களால் விரும்பப்பட்ட நபராக அவர் திகழ்ந்ததாகக் கூறினார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

சென்னையில் குறிப்பாக வடசென்னை மக்கள் தொடர்ந்து பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருவதாகவும், முதல் சந்திப்பிலேயே மக்களின் பிரச்சினைகள் குறித்து கட்சித் தலைவர்களிடம் எடுத்துரைத்தவர் வி.எஸ். பாபு என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். மேலும் அவரது மறைவு ஒட்டுமொத்த சென்னைக்கும், குறிப்பாக வடசென்னை மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் அவர் இரங்கல் தெரிவித்தார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !