← முகப்பு

லாட்டரியில் ஜாக்பாட் அடித்த பெண்!

கனடாவில் வசித்து வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்நேகா ஜாய் என்ற பெண்ணுக்கு, அங்குள்ள புகழ்பெற்ற லாட்டரி குலுக்கலில் மிகப்பெரிய அளவில் பரிசுத் தொகை கிடைத்துள்ளது

லாட்டரியில் ஜாக்பாட் அடித்த பெண்!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள வெங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ஸ்நேகா ஜாய். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு வெங்கூர் உள்ளாட்சித் தேர்தலில் UDF வேட்பாளராக போட்டியிட்டு 13 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதன்பிறகு திருமணமாகி கணவருடன் கனடாவின் எட்மண்டன் நகருக்குக் குடிபெயர்ந்தார்.

பொதுவாக கேரளாவில் லாட்டரிச் சீட்டுகள் மிகவும் பிரபலம் என்பதால், இயல்பாகவே லாட்டரி வாங்கும் பழக்கம் கொண்டிருந்த ஸ்நேகா, கனடாவிலும் தனது அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்க்கும் விதமாக அங்குள்ள பிரபலமான LOTTO 6/49 லாட்டரிச் சீட்டை வாங்கியுள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெற்ற 'லோட்டோ 6/49' குலுக்கலில் வெற்றிபெற்ற நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. ஸ்நேகா வழக்கம்போலத் தனது செல்போன் செயலி வழியாக லாட்டரி முடிவுகளைச் சரிபார்த்தபோது, அப்பட்டியலில் ஸ்நேகா ஜாய் வாங்கிய லாட்டரிச் சீட்டில் இருந்த ஆறு எண்களும் அப்படியே பொருந்தின.

தனக்கு 5 மில்லியன் டாலர் ஜாக்பாட் அடித்திருப்பதைக் கண்டு அவர் உறைந்து போனார். 5 மில்லியன் கனேடிய டாலர்கள் என்பது இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 கோடி ரூபாயாகும்.

இது குறித்து மனம் திறந்த ஸ்நேகா ஜாய், "முதலில் என்னால் இதை நம்பவே முடியவில்லை. மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. அடுத்தடுத்த நொடிகளில் அளவில்லாத மகிழ்ச்சியும், ஒருவித நிம்மதியும் என்னைச் சூழ்ந்து கொண்டது.

இனிமேல் பணத்தைப் பற்றிய எந்தக் கவலையும் இன்றி நிம்மதியாக வாழ முடியும் என்பதுதான் இந்த வெற்றியில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய சந்தோஷம்" என்று கூறியுள்ளார்.

பொதுவாக இவ்வளவு பெரிய தொகை பரிசாக விழுந்தால், உடனடியாக ஆடம்பரப் பொருட்களை வாங்குவது அல்லது வேலையை விடுவது போன்ற முடிவுகளைப் பலரும் எடுப்பார்கள். ஆனால், ஸ்நேகா ஜாய் மிகவும் தெளிவான இரண்டு முக்கியத் திட்டங்களை வைத்துள்ளார்.

தனது முதல் கடமையாக, தற்போதுள்ள வீட்டு அடமானக் கடனை முழுமையாக அடைத்து, கடன் இல்லாத வாழ்க்கையைத் தொடங்க அவர் முடிவு செய்துள்ளார். மேலும் கடன்களை அடைத்த பிறகு, தனது நீண்ட நாள் கனவான உலக சுற்றுலாவை மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி, தன்னுடைய இந்த மகிழ்ச்சியையும் பரிசுத் தொகையையும் தனது அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளப் போவதாகவும், தனது சொந்தக் கனவுகளை நிறைவேற்றுவதைப் போலவே குடும்பத்தினருக்கு உதவுவதும் தனக்கு மிக முக்கியம் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு வாழ் கேரளத்தவர்களுக்கு கைகொடுக்கும் அதிர்ஷ்டம்

வளைகுடா நாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் கேரளத்தவர்களுக்குப் பெரிய அளவிலான லாட்டரிப் பரிசுகள் விழுவது இது முதல் முறையல்ல, இதே ஆண்டின் தொடக்கத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இரண்டு கேரளத்தவர்கள் Dubai Duty Free Millennium Millionaire குலுக்கலில் தலா 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வென்றிருந்தனர்.

அந்த வரிசையில் தற்போது கனடாவில் வசிக்கும் ஸ்நேகா ஜாயும் இணைந்து, மலையாளிகள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !