← முகப்பு

ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படும்!

அமெரிக்கா - ஈரான் இடையே பல மாதங்களாக நீடித்து வரும் மோதலில், போர் குறித்தான ஒப்பந்தங்களில் போதிய முடிவு எட்டப்படாத நிலையில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் அதிபர் டிரம்ப்.

ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படும்!

ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பிராந்திய ஆதிக்கம் தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பல தசாப்தங்களாகப் பகைமை நிலவி வருகிறது. இரு நடுகளுக்கும் இடையிலான தற்போதைய நேரடி ராணுவ மோதல் சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு தீவிரமடைந்து, வளைகுடா பிராந்தியத்தில் போர்ச் சூழலை உருவாக்கியுள்ளது.

ஈரானிடம் அணு ஆயுதங்கள் ஒருபோதும் இருக்கக் கூடாது என்பதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியாக உள்ளார். மேலும் ஈரானின் பொருளாதாரம் மற்றும் எண்ணெய் ஏற்றுமதியை முடக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா கடல்வழித் தடை விதித்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதற்குப் பதிலடியாக, குவைத்தில் உள்ள அமெரிக்க விமானத் தளம் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட அண்டை நாடுகள் மீது ஈரான் தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும், ஈரான் காலத்தை இழுத்தடிப்பதாக அமெரிக்கா குற்றம் தொடர்ந்து சாட்டுகிறது.

இதற்கிடையே ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், போர் ஒப்பந்தம் தொடர்பான தற்போதைய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாதது குறித்து அவர் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

பல மாதங்களாக நீடித்து வரும் மோதலில், புத்தாண்டுக்குப் பிறகு உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் மீது ராணுவத் தாக்குதல்கள் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்

மேலும் ஈரானியத் தூதர்கள் உண்மையான தீர்வை நோக்கிச் செல்லாமல், பேச்சுவார்த்தைகளை இழுத்தடிப்பதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்கத் தேர்தலுக்கு பின்னர் ஈரான் மிகவும் தீவிரமாகச் செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர், ஈரானிய அதிகாரிகளைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.

எனவே போரை முடிக்க ஈரான் விரும்பினாலும், அது வாஷிங்டனுக்கு ஏற்புடைய நிபந்தனைகளின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !